Nithya Menen: ‘அந்த நடிகர் அப்படி டார்ச்சர் கொடுத்தாரா? - பொங்கி எழுந்த நித்யாமேனன்!
நித்யாமேனன் விளக்கம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
கடந்த 2006ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 7’ O கிளாக் திரைப்படத்தில் நடித்ததின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.
குறிப்பாக தமிழில் வெப்பம், மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணி, விஜயின் மெர்சல், காஞ்சனா 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். கடந்த ஆண்டு வெளியான தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.அதில் இவரது நடிப்பு பலரது பாராட்டையும் பெற்றது.
இந்த நிலையில் இன்று இவர், தமிழ் நடிகர் ஒருவர் அவரை படப்பிடிப்பில் துன்புறுத்தினார் என்று பேட்டி கொடுத்ததாகக் கூறி செய்தி ஒன்று உலாவியது. இது திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு நித்யா மேனன் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் நித்யாமேனன், “ நான் நேர்காணலே கொடுக்கவில்லை. பத்திரிகைத்துறையின் சில பிரிவுகள், இப்படி இறங்கி இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இது தவறான செய்தி. இந்த செய்தியில் துளி கூட உண்மை இல்லை.
இந்த வதந்தியை ஆரம்பித்தவர் யார் என்பது உங்களுக்கு தெரிந்தால் எனக்கு சுட்டிக்காட்டவும். நாம் இங்கு மிகவும் குறுகிய காலகட்டமே வாழ்கிறோம். அப்படி இருக்கையில் நாம் ஒருவருக்கொருவர் எவ்வளவு தவறு செய்கிறோம் என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. வெளி உலகத்திற்கு இதனை சொல்வதால் மட்டுமே இது போன்ற மோசமான நடவடிக்கைகளை நிறுத்த முடியும் என்பதால் இதனை நான் இங்கு சுட்டிக்காட்டுகிறேன்” என்று அவர் பதிவிட்டு இருக்கிறார்
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்