Priyanka Deshpande:இது இரண்டாவது முறை.. டிடிவிட்டுக்கொடுக்கலன்னா நீங்க இங்க நிக்கவே முடியாது" - வெளுத்த பிரபலம்
Priyanka deshpande: “மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்கிறேன் என்று சொல்வது, உண்மையில் இது இரண்டாவது முறை.” - உண்மையை போட்டுடைத்த பிரபலம்.

Priyanka Deshpande: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றிய மணிமேகலை, தொகுப்பாளர் பிரியங்கா தன்னை வேலை செய்ய விட வில்லை என்று கூறி, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்த விவகாரத்தில் பலரும் பிரியங்காவை விமர்சித்து வரும் நிலையில், இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து பிரபல தொகுப்பாளர் ரஞ்சித் பேசி இருக்கிறார்.
யார் மீது தவறு
இது குறித்து அவரும், அவரது மனைவியும் எஸ். எஸ் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், “மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்கிறேன் என்று சொல்வது, உண்மையில் இது இரண்டாவது முறை. ஆம் கடந்த சீசனில் சுனிதாவிற்கும், அவருக்கும் இடையே மோதல் வெடித்தது. அந்த மோதலில்தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
அப்போது சிறியதாக பிரேக் எடுத்துக்கொள்கிறேன் என்று கூறி, தன்னுடைய பர்சனல் சார்ந்த விஷயங்களில் அவர் கவனம் செலுத்தினார். அதனை தொடர்ந்து அவர் மீண்டும் ஆங்கராக அந்த நிகழ்ச்சியில் நுழைந்தார். ஆனால், பிரியங்காவுடனான இந்த விவகாரம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக மாறியது. இதற்காக மணிமேகலை சொல்லக்கூடிய கருத்து முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருந்தது.