Kanmani Anbudan: மூக்கோண காதல் கதை..விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் கண்மணி அன்புடன்-new triangular love serial titled as kanmani anbudan to be telecast on vijay tv from sep 16 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kanmani Anbudan: மூக்கோண காதல் கதை..விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் கண்மணி அன்புடன்

Kanmani Anbudan: மூக்கோண காதல் கதை..விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் கண்மணி அன்புடன்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 12, 2024 05:11 PM IST

Kanmani Anbudan: மூக்கோண காதல் கதையை மையப்படுத்தி கண்மணி அன்புடன் என்ற புதிய சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரில் நடிக்க இருக்கும் நடிகர்கள் மற்றும் சீரியலின் கதைச்சுருக்கம் பற்றி பார்க்கலாம்.

Kanmani Anbudan: மூக்கோண காதல் கதை..விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் கண்மணி அன்புடன்
Kanmani Anbudan: மூக்கோண காதல் கதை..விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் புத்தம் புதிய தொடர் கண்மணி அன்புடன்

கதை சுருக்கம்

வெவ்வேறு சமூகப் பின்னணியைச சேர்ந்தவர்களாக இருந்தாலும் சிறந்த நண்பர்களான கண்மணி மற்றும் வெண்ணிலா இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் சுற்றி நகரும் கதைக்களமாக கண்மணி அன்புடன்.

கண்மணி உணவு சமைப்பதில் கைதேர்ந்தவள். சொந்தமாக ஒரு வீட்டில் உணவு தயாரித்து அதை தனது தாயுடன் இணைந்து வியாபாரம் செய்து வருகிறார். அதே நேரத்தில் வெண்ணிலா ஒரு நடிகையாக வேண்டும் என விரும்புகிறார்.

ஒரு சந்தர்ப்பத்தில் அன்பு மற்றும் கண்மணி சந்திக்க நேரிடுகிறது. கண்மணி அன்புவை மிகவும் பிடித்துவிடுகிறது. அவனை ஒரு தலையாக காதலிக்க தொடங்குகிறாள்.

அன்பு ஒரு பணக்கார வீட்டுப்பையன். அவர் ராஜ் ஃபுட் எம்பயர் என்ற நிறுவனத்தை வைத்திருக்கிறார். மறுபுறம் அன்பு வெண்ணிலாவை காதலிக்கிறார். இந்த மூவரின் காதல் கோணம், முடிவில் விதி எப்போதும் வெல்லும் என்னும் படியான பல்வேறு உணர்ச்சிகரமான அத்தியாயங்கலுக்கு வழிவகுக்கிறது.

திருமணத்துக்கு பின் நடக்கும் திருப்பம்

அன்புவின் அம்மாவுக்கு கண்மணி என்றால் மிகவும் பிடிக்கும். சூழ்நிலை காரணமாக அன்பு கண்மணியை திருமணம் செய்கிறார். வெண்ணிலா இவர்கள் திருமணத்துக்கு பிறகு இந்த ஜோடியை சந்திக்கும் போது கதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமாக மாறுகிறது.

அன்பு மற்றும் கண்மணியும் இணைந்து நல்ல கணவன் மனைவியாக வாழ்வார்களா? வெண்ணிலா என்ன செய்ய போகிறாள் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதையுடன் சொல்கிறது இந்த கதை

கண்மணி அன்புடன் கதாபாத்திரங்கள்

அன்புவாக நவீன் வெற்றி, கண்மணியாக மதுமிதா, வெண்ணிலாவாக கிரேசி. ராஜேஸ்வரியாக சாந்தி வில்லியம்ஸ், ராஜ்குமாராக சஞ்சய் அல்ராணி, செந்தலாக காதல் கண்ணன், ராஜசேகராக கிரீஷ் ஐய்யப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

திங்கள் முதல் சனி வரை மதியம் 2 மணிக்கு கண்மணி அன்புடன் என்ற இந்த தொடரை காணத்தவறாதீர்கள்.

முடிவுக்கு வரும் செல்லம்மா சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றாக இருந்து வரும் செல்லம்மா முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.  மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் பெண் ரசிகர்களை அதிகமாக கவர்ந்த சீரியலாக செல்லம்மா இருந்து வருகிறது. 

இந்த சீரியல் 700 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் சீரியல் முடிவுக்கு வர இருக்கிறது.  

விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கும் நிலையில் விஜய் டிவியில் பல சீரியல்கள் முடிவுக்கு வரும். அத்துடன் ஒரு சில சீரியல்களில் நேரம் மாற்றம் ஏற்படுவது வழக்கமான விஷயம் தான். 

இந்த சூழ்நிலையில் செல்லம்மா சீரியல் முடிவுக்கு வர இருக்கும் நிலையில், புதிய சீரியல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிலும் மதிய நேரத்தில் இந்த புதிய சீரியல் கண்மணி அன்புடன் ஒளிபரப்பாக இருக்கிறது.  

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.