CINEMA REPORTS: விஜய் கொடி ரகசியம் டூ த்ரிஷா சர்ச்சை வரை! - இன்றைய டாப் 10 கோலிவுட் கிசுகிசுக்கள்
CINEMA REPORTS: இன்றைய டாப் 10 கிசுகிசுக்கள் சார்ந்த செய்திகளை இங்கே பார்க்கலாம்.

1.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதனை சுருக்கமாக 'தி கோட்' என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் நீளம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
2.Thangalaan Box Office: இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம், தங்கலான். இந்தத் திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். தங்கலான் திரைப்படம் 7 நாட்களில் 35. 56 கோடி வசூல் செய்து இருப்பதாக தெரியவந்திருக்கிறது.
3.அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை இன்று அறிமுகம் செய்து வைத்திருக்கிறார். அந்த கொடியில் நடுவில் வாகை மலர் இருக்கும் நிலையில், அதன் இரண்டும் பக்கங்களிலும் யானை இருக்கிறது. இந்தக்கொடிக்கு இன்ஸ்ப்ரேஷனாக ரபேல் நடால் மற்றும் கார்லோஸ் அல்கராஸ் ஆகியோர் இருப்பதாக சொல்லப்படுகிறது.