Tamil News  /  Entertainment  /  Nayanthara Wishes Her Blessing Vignesh Shivan On Birthday

Vignesh Shivan: “உன்ன போல யாரும் இல்ல புருஷா”;முத்தான வார்த்தைகளுடன் மூக்கில் முத்தம்!- கணவர் பிறந்தநாளில் நயன் உருக்கம்

விக்னேஷ் சிவன் நயன்தாரா!
விக்னேஷ் சிவன் நயன்தாரா!

என் மீது நீ பொழிந்த அன்பிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நம்முடைய உறவின் மீது நீ வைத்திருக்கும் மரியாதைக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். யாரும் உன்னைப்போல் இல்லை.

தமிழ் சினிமாவில் சிலம்பரசனின் ‘ போடா போடி’ திரைப்படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இவரின் இரண்டாவது திரைப்படமான ‘நானும் ரெளடிதான்’ திரைப்படத்தில் நடிகை நயன் தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

இதனையடுத்து பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதனைத்தொடர்ந்து நடிகை நயன்தாரா வாடகைத்தாய் மூலம் இரு ஆண் குழந்தைகளைப் பெற்று கொண்டார்.

நெடுநாட்களாக குழந்தைகளின் முகத்தை பொதுவெளியில் காண்பிக்காமல் வைத்திருந்த நயன்தாரா அண்மையில் குழந்தைகளின் முகத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.

இன்றைய தினம் விக்னேஷ் சிவன் இன்று தன்னுடைய 40 வது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த நிலையில் தானும் தன்னுடைய கணவரும் நெருங்கி இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா மிகவும் உருக்கமாக ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

 

இது குறித்து பதிவிட்டுள்ள நயன்தாரா, “ இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். இந்த சிறப்பு வாய்ந்த நாளில் உன்னைப் பற்றி நான்நிறைய எழுத விரும்புகிறேன். நான் எழுத ஆரம்பித்தால் என்னால் சில விஷயங்களை நிறுத்திக்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன்.

என் மீது நீ பொழிந்த அன்பிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். நம்முடைய உறவின் மீது நீ வைத்திருக்கும் மரியாதைக்கும் நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். யாரும் உன்னைப்போல் இல்லை.

என்னுடைய வாழ்க்கைக்குள் நீ வந்ததற்கு மிகவும் நன்றி. என்னுடைய வாழ்க்கையை கனவாகவும், அர்த்தமுள்ளதாகவும், அழகானதாகவும் மாற்றியதற்கு மிகவும் நன்றி. நீ செய்யும் எல்லாவற்றிலும் நீ சிறந்தவன். என் உயிராக இருக்கும் எல்லாவற்றிலும் நீ சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

டாபிக்ஸ்