“ நட்பெல்லாம் ரொம்ப பெரிய வார்த்தை.. த்ரிஷாவிற்கு என்ன பிடிக்காது எனக்கும் அவர..” - அப்போதே ஓப்பனாக பேசிய நயன்!
நடிகை நயன்தாரா தன்னுடன் நடிகை த்ரிஷா உடனான உறவு எப்படி இருந்தது என்பது குறித்து முன்னதாக கொடுத்த பேட்டி ஒன்றில் ஓப்பனாக பேசினார்.
சினிமா துறையில் அவருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே போட்டியாக பார்க்கப்படுவர் நடிகை த்ரிஷா. நம்பர் 1 இடத்திற்கான இந்த போட்டியே, அவர்களது உறவில் போதுமான விரிசலை ஏற்படுத்த முழு முதற் காரணமாக அமைந்து விட்டதாக திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் அவருடனான உறவு குறித்து நடிகை நயன்தாரா பல வருடங்களுக்கு முன்னதாக விஜய் டிவிக்கு அளித்த பேட்டியில் பேசி இருந்தார். அந்த பேட்டியை இங்கே காணலாம்.
பிரச்சினைகள் இருக்கின்றன
அவர் பேசும் போது, “த்ரிஷா, ஸ்ரேயா உள்ளிட்டோரை நான் நண்பர்கள் என்று சொல்லமாட்டேன். காரணம், நட்பு என்பது மிகப்பெரிய வார்த்தை. அதை அவர்களுக்கு பயன்படுத்த முடியாது. எங்களுக்குள் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இதுதான் அந்த பிரச்சினை என்று என்னால் அப்படியே பொதுவெளியில் அப்படியே போட்டு உடைக்க முடியாது.
ஹீரோயின்கள் என்றாலே அதெல்லாம் இருக்கத்தான் செய்யும். பொதுவாக கூட சொல்வார்களே.. ஒரு பெண்ணுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் ஆகாது என்று.. அது போலதான். அப்படியும் அவர்களிடம் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அவர்களுக்கு என்னிடத்தில் பிரச்சினை இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் அதனை பெரிதாக கண்டுகொள்ள மாட்டேன். அதே போல பிரச்சினை இருக்கிறது என்பதற்காக நானாக சென்றெல்லாம் அவர்களிடத்தில் பேசமாட்டேன்.
அது எனக்குத் தேவையே கிடையாது. உண்மையில், நண்பர் என்ற ஸ்தானத்தில் ஒருவர் இருந்தால் அவரிடத்தில் நிச்சயம் நான் சென்று பேசுவேன். அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி எடுப்பேன்.ஆனால், இவர்களிடத்தில் அந்தளவு பெரிய பிரச்சினை கிடையாது. த்ரிஷாவிற்கு என்னை பிடிக்காது. அவருக்கு பிடிக்காது என்றால் எனக்கும் பிடிக்காதுதான்” என்று பேசினார்.
நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்.
இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நயனின் நெட்ஃபிளிக்ஸ் டாக்குமெண்ட்ரி போஸ்டரை பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துகள் என் உயிரே... நான் உனக்கு தந்திருக்கும் காதலை விட, உன் மீது வைத்திருக்கும் மரியாதை பல மடங்கு அதிகம் தங்கமே.. அதைத்தான் நான் எழுதி உன்னிடம் கொடுத்தேன்.. உசுருள்ள வரைக்குமே..உனக்கு என்ன புடிக்கணும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்