“100 கோடி வீடு.. 50 கோடியில் தனி விமானம்.. சொகுசு கார்கள்.. முதலீடு மட்டுமே 100 கோடிக்கு மேல்..” - நயனின் சொத்து மதிப்பு
நயன்தாராவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடி என்று கூறி டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவிற்கு இன்று 40 வது பிறந்தநாள். பெரும் புகழும், சர்ச்சைகளும் அடங்கிய அவரது கரடுமுரடான வாழ்க்கை, விக்னேஷ் சிவன் வந்த பின்னர்தான் நேர்கோட்டை நோக்கிச் சென்றது. விக்னேஷ் சிவன் அன்பு நயனின் வாழ்க்கையை ஒரு கட்டத்தில் மொத்தமாக ஆட்கொள்ள, அவரையே திருமணம் செய்த நயன், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
நயன் சொத்து மதிப்பு
முதலில் சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நயன், ஒரு கட்டத்தில் தொழிலதிபராக மாறி, பல்வேறு தொழில்களில் தன்னுடைய பணத்தை முதலீடு செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் அவருக்கு ஏராளமான வருமானமும் தற்போது வந்து கொண்டிருக்கிறது. பர்சனல் மற்றும் தொழில் என இரு குதிரைகளிலும் கனகச்சிதமாக பயணித்து வரும் நயனின் சொத்து மதிப்பு 200 கோடியை தாண்டும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில், அவரின் சொத்து மதிப்பு விபரங்களை இங்கே பார்க்கலாம்.
நயன்தாராவின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 200 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறி, டைம்ஸ் ஆஃப் இந்தியா இணையதளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதனடிப்படையில் பார்க்கும் போது, நயனுக்கு சொந்தமாக கிட்டத்தட்ட 4 வீடுகள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதில், சென்னையில் இருக்கும் வீடு மட்டும் 100 கோடி மதிப்பு வாய்ந்தது என்று கூறப்படுகிறது.
தற்போது நயன் மும்பையில் இருக்கும் 4 சொகுசு அறைகள் கொண்ட வீட்டில் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனுடன் வசித்து வருகிறார்.அந்த வீட்டில் தனியாக திரையரங்கம்.. நீச்சல் குளம், ஜிம் உள்ளிட்ட பல நவீன வசதிகள் இருக்கின்றனவாம். இது போக ஹைதராபாத் பஞ்சாரா மலையில் 2 வீடுகள் இருக்கின்றன. அந்த இரண்டு வீடுகளின் மதிப்பு 60 கோடி என்று தெரிய வந்திருக்கிறது.
அம்மணியிடம் சொகுசு கார்களுக்கும் பஞ்சமில்லை. அதில் ஒரு கார் 1. 76 கோடியும், ஒரு கார் 1 கோடி ரூபாயும் பெறும் என்று கூறப்படுகிறது. அதில் அவருக்கு ஏற்றவாறு பல்வேறு நவீன வசதிகளை செய்து வைத்திருக்கிறாராம். இது போதாது என்று ஒரு தனி ஜெட்டையும் வைத்திருக்கிறார். அதன் மதிப்பு கிட்டத்தட்ட 50 கோடி என்று சொல்லப்படுகிறது. பிரியங்கா சோப்ரா, ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட சில நடிகைகளுக்கு பிறகு இந்த வசதியை வைத்திருப்பவர் நடிகை நயன்தாராதானாம்.
சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக வலம் வரும் நயன்தாரா, பல தொழில்களிலும் தன்னுடைய பணத்தை முதலீடு செய்திருக்கிறார். 10 கோடி ரூபாயை லிப் பாம் அழகு சாதன பொருளில் முதலீடு செய்திருக்கும், அவர் ஐக்கிய அரபு நாட்டு ஆயில் பிசினஸில் 100 கோடி ரூபாயை முதலீடு செய்திருக்கிறார்.
இன்றைய தினம் நயன்தாராவின் பிறந்த நாள் ஸ்பெஷலாக, அவரின் கல்யாண ஆவணப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் தான் தயாரித்த நானும் ரெளடிதான் படத்தில் இருந்து காட்சிகளை பயன்படுத்தி இருப்பதாக கூறி, நோட்டீஸ் அனுப்பியதும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நயன் தாரா அவரின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து அறிக்கை வெளியிட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி வலைப்பேச்சு சேனலில் பேசி இருந்தார். அந்த பேட்டி இங்கே!
இது குறித்து அவர் பேசும் பொழுது," நானும் ரவுடிதான் திரைப்படத்தை தனுஷ் தான் தயாரித்திருந்தார். அந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க,.விக்னேஷ் சிவன் படத்தை இயக்கியிருந்தார். அந்தப் படப்பிடிப்பின் பொழுது நயன்தாராவுக்கும் விக்னேஷ் அவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
ஒரு கட்டத்தில் அந்த காதல் பற்றி கொண்டு எறிய,.விக்னேஷ் சிவன் படப்பிடிப்பில் கவனம் செலுத்தாமல் காதலில் கவனம் செலுத்தினார். இதனால் படத்தின் பட்ஜெட் எகிறி விட்டது..இதில் கடுப்பான தனுஷ் இனி நான் படத்திற்கு ஒரு பைசா கூட தர மாட்டேன்; படத்தை முடிந்தால் முடியுங்கள்; இல்லை என்றால், படத்தை நான் நிறுத்தி விடுகிறேன் என்று கறாராக கூறிவிட்டார்.
பிரச்சினையில் தலையிட்ட நயன்!
இந்த நிலையில் நயன்தாரா பிரச்சினையில் தலையிட்டு, அவர் தன்னுடைய பணத்தை போட்டு அந்த படத்தைப் போட்டு முடிக்க உதவி செய்தார்.
இந்த பிரச்சினையின் வழியாக, நயன்தாராவிற்கும், தனுஷிற்கும் இடையே மிகப்பெரிய விரோதம் நீண்ட காலமாகவே இருந்து வந்தது. ஆனால் இரு தரப்புமே அதை வெளியே அப்பட்டமாக காண்பிக்காமல், சுமூகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். இந்த நிலையில்தான் விக்னேஷ் சிவன் நயன்தாரா தரப்பு, netflix நிறுவனத்துடன் தன்னுடைய ஆவணப்படத்தை எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது.
ஆனால், அந்த ஆவணப்படம் உருவாகி நீண்ட நாட்களாக வெளியே வராமலேயே இருந்தது அதற்கு காரணம் தனுஷ்தான். அந்த ஆவணப் படத்தில் தனுஷின் நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான பல காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ஆனால் தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை. இந்த நிலையில் அது கிடப்பிலேயே போடப்பட்டது இப்போது நயன்தாரா தரப்பு, சட்டவிரோதமாக நானும் ரவுடிதான் திரைப்படம் தொடர்பான காட்சிகளை ஆவணப்படத்தில் பயன்படுத்தி இருக்கிறது.
மேலும் இது தொடர்பான எந்த விவாதமாக இருந்தாலும், நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று பதிவிட்டும் சவாலும் விட்டு இருக்கிறது.
யார் குற்றவாளி?
இன்று நயன்தாரா வெளியிட்ட அறிக்கையை பார்க்கும் பொழுது நயன்தாரா என்னவோ அப்பாவி போலவும், தனுஷ் மிகப்பெரிய குற்றவாளி போலவும் தோன்றலாம். ஆனால் உண்மையில் நடந்தது வேறு; ஆம், திரை மறைவில் நிறைய விஷயங்கள் நடந்திருக்கின்றன.
நயன்தாரா தரப்பு, நானும் ரவுடிதான் திரைப்படத்திலிருந்து பாடல்களையோ காட்சிகளையோ பயன்படுத்த வேண்டுமென்றால் நேரடியாக தனுஷை தொடர்பு கொண்டு, முறையாக அனுமதி கேட்டு இருக்கலாம். ஆனால்,அது நடக்கவில்லை;
இதில், விக்னேஷ் சிவன் ஒரு பயங்கரமான வேலை பார்த்து இருக்கிறார்; தனுஷின் மேனேஜரான ஸ்ரேயாஸ் விக்னேஷ் சிவனுக்கும் நண்பர். அவர் ஒருநாள் அவருக்கு போன் செய்து மிகவும் சகஜமாக பேசுவது போல, நானும் ரவுடிதான் படம் தொடர்பான காட்சிகளை நான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஒரு மெயில் போடு என்று சொல்லிவிட்டு சாப்பிட்டியா... நன்றாக இருக்கிறாயா..? என்று கேட்டு உடனடியாக போனை கட் செய்துவிட்டாராம்;
ஆனால் ஸ்ரேயாஸ் மெயிலை அனுப்பவே இல்லை. இந்த நிலையில் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் போன் செய்து ஏன் மெயில் அனுப்பவில்லை என்று விக்னேஷ் சிவன் கேட்டிருக்கிறார்.அதற்கு ஸ்ரேயாஸ்,.தனுஷ் சாரை கேட்காமல் நான் எப்படி அனுப்ப முடியும் என்று அவர் சொல்லி, அவரிடம் கேட்டுவிட்டு உனக்கு தகவல் சொல்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் அவரிடம் எதற்கு இதையெல்லாம் கொண்டு செல்ல வேண்டும்; நீயே அனுப்பிவிடு என்று வற்புறுத்தி இருக்கிறார்.
ஆனால், மிகவும் ஸ்ரேயாஸ் உஷாராக முடியாது என்று சொல்லி இதை தனுஷிற்கு கொண்டு சென்றுவிட்டார்; ஆனால்,.தனுஷ் முடியாது என்று கூறிவிட்டார். இந்த நிலையில் தனுசுக்கு பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் கொடுப்பதற்கான வேலைகளை நயன்தாரா தரப்பு செய்திருக்கிறது. அது அரசியல் ரீதியாக இருந்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் கடைசிவரை தனுஷ் அசரவே இல்லை. இவ்வளவு.அடம் பிடித்து.ஏன் அந்த படத்தில் உள்ள காட்சிகள்,.வரிகளை கேட்கிறார்கள் என்றால், நயன்தாராவுக்கும் விக்னேஷ் இவனுக்கும் இடையே காதல் பூத்த தருணத்தில், அந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் எழுதப்பட்டன..அதனால் அதன் பாடல்கள் இல்லாமல் நயன்தாராவின் ஆவணப்படம் முழுமை அடையாது என்பதே அதற்கான முழு காரணம்.
ஒரு கட்டத்தில், எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்று தெரிந்தவுடன் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும்,.அதன் மூலம் தனுஷின் இமேஜையை காலி செய்ய போவதாகவும் மிரட்டி இருக்கிறார்கள்.
இதையடுத்து தான் தனுஷ் கோபமடைந்து அவர்கள் செய்வதை செய்யட்டும் என்று சென்றுவிட்டார். இதற்கிடையே நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தின் படி ஆவணப்படம் வெளியாவதில் சிக்கல் இருப்பதால், கொடுத்த தொகையை திருப்பி கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே தனுஷும் நயன்தாராவின் ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் பட காட்சிகள் இடம் பெற்றிருப்பது தொடர்பாக 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆக, இரண்டு வியாபாரிகளுக்குள் நடந்த இந்த பிரச்சனைக்கு, வேறு கலர் பூசி, இதை வெளியே காண்பித்திருக்கிறார் நயன்தாரா. " என்று பேசி இருக்கிறார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்