Anand krishnamoorthi: ‘மணி சார் அப்பவே அப்படித்தான்;கமல் சாரின் மர்மயோகிதான்’-தேசிய விருது வென்ற ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!
Anand krishnamoorthi: இது இப்போது அல்ல, அஞ்சலி திரைப்படத்தில் நான் நடிக்கும் பொழுதே, அவர் என்னை அப்படித்தான் ட்ரீட் செய்தார். நான் தற்போது சவுண்ட் டிசைனராக பல படங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். - ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி!
70 வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் அதிக விருதுகளை தட்டிச்சென்று இருக்கிறது. குறிப்பாக, இந்தப்படத்தில் சவுண்ட் டிசைனராக பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு, சிறந்த சவுண்ட் டிசைனருக்கான விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவர் அடிப்படையில் ஒரு டெக்னிஷியனாக இருந்தாலும், அவர் குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி, சதிலீலாவதி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். இவர் கடந்த வருடம் பிஹைண்ட் வுட்ஸ் சேனலுக்கு பேட்டிக்கொடுத்தார். அந்த பேட்டி இங்கே!
கமல்சாரின் மர்மயோகி
அந்த பேட்டியில் அவர் பேசும் போது, “என்னதான் எனக்கு மணிரத்னம் சாரை சின்ன வயதில் இருந்து தெரிந்தாலும், தொழில் என்று வந்துவிட்டால், அவர் மிகவும் கறாராகத்தான் இருப்பார். இது இப்போது அல்ல, அஞ்சலி திரைப்படத்தில் நான் நடிக்கும் பொழுதே, அவர் என்னை அப்படித்தான் ட்ரீட் செய்தார். நான் தற்போது சவுண்ட் டிசைனராக பல படங்களில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
கமல் சாரின் மர்மயோகி திரைப்படம்தான் நான் சவுண்ட் இன்ஜினியராக முதலில் பணியாற்ற வேண்டிய படமாக இருந்தது. ஆனால் அந்த படம் வெளியே வரவில்லை. அந்த படத்தை குறித்து என்னை எதுவும் கேட்காதீர்கள். என்னால் எதுவும் சொல்ல முடியாது. காரணம் என்னவென்றால் அந்த படம் கமல் சாரின் குழந்தை. அந்தப்படம் குறித்து ஒரே ஒரு விஷயத்தை மட்டும் என்னால் சொல்ல முடியும்.
நடிகராக இருப்பதை விட பாதுகாப்பானது
அந்த படம் மட்டும் வெளியே வந்திருந்தால், மிக மிக சிறப்பான ஒரு படமாக அது இருந்திருக்கும். அஞ்சலி படத்தின் படத்தின் ஆடியோ கிராஃபிற்கு தேசிய விருது கிடைத்தது. பின்னாளில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறேன். காலம் அவ்வளவு கோர்வையாக வாழ்க்கையை அமைத்து விட்டது. எனக்கு ஒரு நடிகராக இருப்பதை விட, திரைக்குப் பின்னால் ஒரு டெக்னிசியனாக இருப்பது பாதுகாப்பானது என்று நினைத்தேன். நான் ஒரு வேலை நடிகராக இருந்திருந்தால், இந்த துறைக்கு வந்திருக்க மாட்டேன். நடிகராக இருப்பதை விட ஒரு டெக்னிசியனாக இருப்பது மிகவும் கஷ்டமானது என்று நான் நினைக்கிறேன்.
ஒரு வேளை நான் நடிகராக இருந்திருந்தால், ஒரு நடிகராக இருப்பது தான் கஷ்டம் என்று கூறியிருப்பேன். சிறு வயதில் திரையில் என்னுடைய முகத்தை பார்த்தவர்கள் வெளியே என்னை கண்டுபிடித்து விடுவார்கள். சிலர் இவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என்பார்கள். சிலர் நேராக வந்து என்னிடம் கேட்டுவிடுவார்கள். காரணம் நான் மிகவும் இயல்பாக பொதுவெளியில் நடமாடுகிறேன். பொது போக்குவரத்தில் பயணிக்கிறேன்” என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்