தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Srithika Marriage: நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்.. இரண்டாவது கணவரை அறிமுகம் செய்த நாதஸ்வரம் சீரியல் நடிகை

Srithika Marriage: நான்கு வருடத்தில் முடிவுக்கு வந்த திருமணம்.. இரண்டாவது கணவரை அறிமுகம் செய்த நாதஸ்வரம் சீரியல் நடிகை

Aarthi Balaji HT Tamil
Jun 13, 2024 02:45 PM IST

Srithika Marriage: மகராசி சீரியலில் தன்னுடன் நடிக்கும் இணை நடிகருமான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார் சீரியல் நடிகை ஸ்ரீதிகா.

Srithika Marriage: இரண்டாவது கணவரை அறிமுகம் செய்த நாதஸ்வரம் சீரியல் நடிகை
Srithika Marriage: இரண்டாவது கணவரை அறிமுகம் செய்த நாதஸ்வரம் சீரியல் நடிகை

Srithika Marriage: சீரியல் நடிகை ஸ்ரீதிகா கடந்த 2019 ஆம் ஆண்டு சனீஷை திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டார்கள்.

மீண்டும் காதல்

தற்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார் ஸ்ரீதிகா. இவர், நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் பேரனும், ' மகராசி சீரியலில் தன்னுடன் நடிக்கும் இணை நடிகருமான எஸ்.எஸ்.ஆர்.ஆர்யனை காதலிப்பதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.

ஸ்ரீதிகா மற்றும் ஆர்யன் இருவரும் தங்கள் சமூக ஊடகத்தில், "இந்த முக்கியமான செய்தியை எங்கள் சமூக ஊடக குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். ஸ்ரீதிகா & ஆர்யன் இருவரும் ஏற்கனவே எங்கள் முந்தைய திருமண வாழ்க்கையிலிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டோம்.

அடுத்த கட்டத்திற்கு சென்ற நட்பு

அது ஏன் என்று சொல்ல நாங்கள் விரும்பவில்லை. யாரையும் குறை சொல்ல அல்லது நமது கடந்தகால வாழ்க்கையிலிருந்து எந்த விதமான எதிர்மறையை விஷயத்தையும் பேச விரும்பவில்லை. ஏனென்றால் தூய நட்பையும், புரிந்துணர்வையும் இறுதியாக நம் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

பதிவு திருமணம்

உங்கள் அனைவரின் ஆதரவுடனும், எங்கள் பெற்றோரின் ஆசீர்வாதத்துடனும் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் எடுத்த இந்த முடிவுக்கு உங்கள் அன்பையும், ஆதரவையும் எப்போதும் போல பொழியுமாறு கேட்டுக்கொள்கிறோம். இது தொடர்பான படங்கள், வீடியோக்கள் மற்றும் சமூக ஊடக நேர்காணல்களை விரைவில் பகிர்வோம். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது முதல் கணவரின் பெயருடன் உள்ள தனது இன்ஸ்டாகிராம் ஐடியை மாற்ற முடியவில்லை என்றும், அது விரைவில் சரி செய்யப்படும் “ எனக் குறிப்பிட்டு உள்ளார். இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

யார் இந்த ஸ்ரீதிகா

மலையாள நடிகையும், மாடலுமான ஸ்ரீதிகா மலேசியாவில் பிறந்து வளர்ந்தவர். படிப்பை முடித்ததும், தந்தையின் தொழில் காரணமாக சென்னைக்கு வந்தார்.

நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், சீரியல்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி வந்த நிலையில், படங்களிலும் நடிக்க முயற்சி செய்தார்.

அந்த வகையில் வெண்ணிலா கபடி குழு, மகேஷ் சரண்யா மற்றும் பலர், வேங்கை போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் படத்தில் நடித்து இருக்கிறார்.

வாழ்க்கையை மாற்றிய நாதஸ்வரம்

இதுவரை 10 க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருந்தாலும் மறக்க முடியாத திருப்பம் ஏற்படுத்திய சீரியல் என்றால் அது நாதஸ்வரம் தான். திருமுருகன் இயக்கிய இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி 2010 முதல் 2015 வரை 5 வருடங்கள் முதல் 3 டிஆர்பி ரேட்டிங்குடன் ஓடியது. இந்த சீரியலில் மலர் கொடியாக ஸ்ரீதிகா நடித்திருந்தார்.

ஆர்யன் முதல் மனைவி

வாணி ராணி, கல்யாண பரிசு மற்றும் திருமகள் போன்ற சீரியலில் நடித்தவர், நிவேதிதா பங்கஜ். இவர் எஸ்.எஸ்.ஆர் ஆர்யன் மணந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்றனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.