Coolie Scene Leaked: சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக்..இரண்டு மாத உழைப்பு வீண்! லோகேஷ் கனகராஜ் வருத்தம்-nagarjunas video from the sets of rajinikanth lokesh kanagarajs coolie leaks - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Coolie Scene Leaked: சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக்..இரண்டு மாத உழைப்பு வீண்! லோகேஷ் கனகராஜ் வருத்தம்

Coolie Scene Leaked: சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக்..இரண்டு மாத உழைப்பு வீண்! லோகேஷ் கனகராஜ் வருத்தம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 19, 2024 08:22 AM IST

Coolie Scene Leaked: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தில் சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக் ஆகியுள்ளது. இரண்டு மாத உழைப்பு வீண் ஆகி இருப்பதாக இதுகுறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Coolie Scene Leaked: சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக்..இரண்டு மாத உழைப்பு வீண்! லோகேஷ் கனகராஜ் வருத்தம்
Coolie Scene Leaked: சுத்தியலால் தாக்கும் நாகார்ஜூனா சீன் லீக்..இரண்டு மாத உழைப்பு வீண்! லோகேஷ் கனகராஜ் வருத்தம்

இதையடுத்து சைமன் கதாபாத்திரம் ஒருவரை கொடூரமான தாக்குவது போன்ற காட்சியை ரசிகர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து ஆன்லைனில் லீக் செய்துள்ளார்.

லீக்கான நாகார்ஜுனா சீன்

எக்ஸ் தளத்தில் உலா வந்த இந்த விடியோவில், நாகார்ஜுனா வெள்ளை நிற உடை அணிந்து ஒருவரை சுத்தியலால் தாக்குவதை காணலாம். இந்த விடியோ வெகு தொலைவில் இருந்து படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது, அதேபோல் மற்றொரு விடியோ, சுத்தியலால் அடிக்கும் முன் அந்த நபரை நாகார்ஜுனி மிரட்டுவதாக தெரிகிறது. படக்குழுவினர் வசனத்தை உச்சரிக்கை அதை கேட்டு நாகார்ஜூனா பேசுகிறார்.

இதை பார்க்க பலரும் கூலி படம் மீதான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கருத்துகளை பகிர்ந்தனர். விக்ரம் படத்தில் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தின் வைப் இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த விடியோக்கள் எக்ஸ் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் வருத்தம்

கூலி பட காட்சி லீக் செய்த ரசிகர்களின் செயலுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரேயொரு பதிவினால் பலரது இரண்டு மாத உழைப்பு வீணாக போனது. ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் விதமாக இருக்கும் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கூலி பட கதாபாத்திரங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஆக்சன் த்ரில்லராக உருவாகி வரும் கூலி படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிப்பு வெளியிடப்பட்டன. அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேவா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நீண்ட நாள்களுக்கு பிறகு சத்யராஜ், ரஜினியுடன் இணைந்த இந்த படத்தில் நடிக்கிறார். அவர் ராஜசேகர் என்ற கேரக்டரிலும், நாகார்ஜூனா சைமன் என்ற பெயரிலும் தோன்றுகிறார்கள்.

மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர், தயாள் என்ற பெயரிலும், ஸ்ருதிஹாசன் ப்ரீத்தி என்ற பெயரிலும், கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற பெயரிலும் தோன்றுகிறார்கள்.

கடந்த ஜூலை மாதம் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்ற நிலையில், தற்போது விசாகபட்டினத்தில் உள்ள துறைமுகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படம் அடுத்த ஆண்டில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.