தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nagarjuna Apology: மாற்று திறனாளி ரசிகரை இழுத்து தள்ளிய சம்பவம்! மன்னிப்பு கோரினார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா

Nagarjuna Apology: மாற்று திறனாளி ரசிகரை இழுத்து தள்ளிய சம்பவம்! மன்னிப்பு கோரினார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 24, 2024 12:55 PM IST

தன்னை சந்திக்க வந்த மாற்று திறனாளி நபரை தனது பாடிகார்ட் பிடித்து இழுத்து தள்ளிய சம்பவத்தில், “அந்த ஜெண்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று மன்னிப்பு கோரினார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா. இந்த அதிர்ச்சி சம்பவத்தை நடிகர் தனுஷும் பார்த்தபடி நடந்து சென்றார்.

மாற்று திறனாளி நபரை  இழுத்து தள்ளிய சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரினார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா
மாற்று திறனாளி நபரை இழுத்து தள்ளிய சம்பவம் தொடர்பாக மன்னிப்பு கோரினார் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா

தெலுங்கு, தமிழ், இந்தி என பான் இந்தியா படமாக குபேரா உருவாகி வருகிறது.

ரசிகரை பிடித்து தள்ளிய பாடிகார்ட்

இதையடுத்து ஏர்போர்டில் நாகார்ஜுனா நடந்து வந்துகொண்டிருந்தபோது அவரது பாடிகார்ட் மாற்று திறனாளி ரசிகர் ஒருவரை பிடித்து தள்ளி சம்பவம் தொடர்பான விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

கூலர்ஸ் அணிந்தவாறு கருப்பு நிற சட்டை அணிந்து கொண்டு பாடிகார்ட்கள் சூழ ஏர்போர்ட்டில் நடந்து வந்து கொண்டிருந்தார் நடிகர் நாகார்ஜுனா. அப்போது திடீரென மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர், நாகார்ஜுனா அருகே செல்ல முயற்சித்துள்ளார். உடனடியாக உஷாரான பாடிகார்ட் அந்த நபர் கண் இமைக்கும் நாகார்ஜுனாவை நெருங்க விடாமல் பிடித்து இழுத்து தள்ளியுள்ளார்.

இந்த சம்பவத்தின் விடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த சம்பவத்தின்போது நடிகர் தனுஷும், நாகார்ஜுனா பின் நடந்து வந்துகொண்டிருந்தார்.

பாடிகார்டால் ரசிகர்கள் இழுத்த தள்ளிவிட்டதபோது அங்கிருந்தவர்கள் சத்தம் எழுப்ப நாகார்ஜுனா கவனிக்காதது போல் நடந்து சென்றார். பின்னாடி நடந்து வந்த தனுஷ் அந்த சம்பவத்தை பார்த்து சற்றே சிறிது பதட்டமாகி பின் நடையை தொடர்ந்தார்.

ரசிகர்கள் விமர்சனம்

இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தனர். "அவர் மாற்றுத்திறனாளி. எவ்வளவு அவமானமாக உணர்ந்திருப்பார்", இது நெஞ்சை பதற வைக்கிறது. அந்த நபர் இத்தகைய மனிதாபிமானத்துக்கு தகுதியானவர் இல்லை", "பிரபலங்கள் அருகே மிக நெருக்கமாக வரும் ரசிகர்களைக் கையாள இதை விட சிறந்த வழிகள் உள்ளன", "அவர் நிச்சயமாக மாற்று திறனாளி அல்லது மனவளர்ச்சி கோளாறு உள்ளவர் என தெரிகிறது. அவரது கைகளும் முக அமைப்பும் அதை வெளிப்படுத்துகின்றன. அவர் மீதான் இந்த நடவடிக்கை மோசமானது. அதை நாகார்ஜுனா கவனித்தாலும் நிற்காமல் போனதுதான் கொடுமை" என்று ரசிகர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர்.

நாகார்ஜுனா மன்னிப்பு

பின்னர் இந்த சம்பவத்தின் விடியோ மனிதாபிமானம் எங்கு சென்றது என்ற கேப்ஷனில் சமூக பகிரப்பட்டது. இது நாகார்ஜுனா கவனத்துக்கு சென்ற நிலையில், "இந்த விடியோ என் கவனத்துக்கு வந்தது... இப்படி நடந்திருக்கக் கூடாது!! நான் அந்த ஜென்டில்மேனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் (கூப்பிய கைகளுடன் எமோஜியை பகிர்ந்து) எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பேன்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்