இரண்டாவது மகன் அகிலுக்கும் திருமணம்..டபுள் கொண்டாட்டத்தில் நாகார்ஜுனா பேமிலி! மணமகள் யார் தெரியுமா?
கடந்த ஆக்ஸ்ட் மாதம் மூத்த மகனும், நடிகருமான நாகசைதன்யா திருமண நிச்சியதார்த்தத்தை அறிவித்தார் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா. தற்போது இளைய மகன் அகில் அக்கினேனி திருமணம் குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தற்போது டபுள் கொண்டாட்டத்தில் நாகார்ஜுனா பேமிலி உள்ளது
தெலுங்கு சினிமாவில் மூத்த ஹீரோவாக இருந்து வரும் நாகர்ஜூனாவின் மகன்கள் நாக சைதன்யா, அகில் என இருவரும் நடிகர்களாக இருக்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் இளம் ஹீரோக்களாக இவர்கள் இருந்து வருகிறார்கள்.
இதில் தமிழ் நடிகை சமந்தாவை திருமணம் செய்து கொண்டு விவாகரத்தான நாக சைதன்யாவுக்கும், பிரபல தெலுங்கு நடிகை சோபிதா துலிபாலாவுக்கு இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
அகிலுக்கு திருமண நிச்சயதார்த்தம்
இதைத்தொடர்ந்து நாகாரஜூனா இளைய மகனும், நாக சைதன்யாவின் சகோதரருமான அகிலுக்கு தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. ஹைதராபாத்தில் பிறந்து துபாய், லண்டன், இந்தியா என வசித்து வரும் பிரபல ஓவியரான ஜைனப் ராவ்ஜி என்பவருக்கும், அகிலுக்கும் இடையே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது.
இவர் பிரபல தொழிலதிபரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சரை ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நியமித்த மத்திய கிழக்கு பகுதிகளின் ஆந்திர பிரதேச மாநில அரசின் பிரதியாக இருந்த சுல்ஃபி ராவ்ட்ஜீயின் மகள் ஆவார்.
அகில் - ஜைனப் ராவ்ஜி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் இரு குடும்பத்தை சேர்ந்த நெருக்கமானவர்கள் மட்டும் பங்கேற்ற நிலையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் பின்னர் மகன் அகிலுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் ஆகியிருப்பதை அவரது அப்பாவான நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகள் டேட்டிங்
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் சந்தித்து கொண்ட நிலையில், டேட்டிங்கில் இருந்த வந்துள்ளனர். தற்போது இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நாகார்ஜூனா வீட்டில் வைத்து நடந்து முடிந்துள்ளது. இவர்களின் திருமணம் எப்போது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், அடுத்த ஆண்டில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் இந்த ஜைனப் ராவ்ஜி?
27 வயதாகும் ஜைனப் ராவ்ஜி, ஹைதராபாத்தில் பிறந்து இந்தியாவில் பள்ளி படிப்பை முடித்து, மேல் படிப்புக்காக லண்டன் சென்றார். கவின் கலையில் பட்டம் வென்ற இவர் பல்வேறு விதாமான ஸ்டைல்களில் பாரம்பரியமான, மாடர்ன் ஓவியங்கள் வரைந்து கேலரிகளை வைத்துள்ளார். பல வகையான கருபொருள்களுடன் கூடிய ஓவியங்களால் இவர் தனது கேலரிகளை நிரப்பியுள்ளார்.
அகில் அக்கினேனி படங்கள்
கடந்த 2016இல் அகிலுக்கும், ஷ்ரேயா பூபால் என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதன் பின்னர் இவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது. அதற்கான காரணங்கள் எதுவும் வெளியாகவில்லை. தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு அகில் அக்கினேனிக்கும் ஓவியரான ஜைனப் ராவ்ஜிக்கும் திருமணம் நிச்சயதார்த்தும் நடந்துள்ளது.
அகில் அக்கினேனி, தெலுங்கில் அகில் என்ற படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் ஹலோ, மிஸ்டர் மஜ்னு, மோஸ் எலிஜபிள் பேச்சிலர், ஏஜெண்ட் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார்.
நாகசைதன்யா - சோபிதா திருமணம்
தெலுங்கு சினிமாவில் அடுத்த ஸ்டார் ஜோடிகளாக வலம் வர இருக்கும் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜூனாவுக்கு சொந்தமான அன்னப்பூர்னா ஸ்டுடியோஸில் வைத்து நடைபெற இருக்கிறது. இவர்களின் திருமணம் குறித்த தகவல் வெளியான அடுத்த இரு நாள்களில் நாகார்ஜூனா வீட்டில் மற்றொரு சுப நிகழ்ச்சியும் அரங்கேறியுள்ளது.
டாபிக்ஸ்