Telangana Assembly Elections: வரிசையில்நின்று வாக்களித்த நாகார்ஜூனா, நானி, ராணா
தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் டோலிவுட் பிரபலங்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.
தெலங்கானா சட்டப்பேரவைத்தேர்தல் இன்று(நவம்பர் 30) நடைபெற்றுவரும் நிலையில், டோலிவுட் பிரபலங்களான நாகார்ஜுனா முதல் நானி வரை; சாய் தரம் தேஜ் முதல் நாக சைதன்யா வரை அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
நாகார்ஜுனா, நாக சைதன்யா , அமலா அக்கினேனி, நந்தமுரி கல்யாண்ராம், ராணா டகுபதி மற்றும் சில பிரபலங்கள் அதிக பரபரப்பு இல்லாமல் வாக்குச் சாவடிகளுக்கு வந்தனர். நாகார்ஜுனாவும் நாக சைதன்யாவும் வரிசையில் நிற்கும்போது ஒரு இலகுவான தருணத்தைப் பகிர்ந்து கொள்வதைக் காண முடிந்தது. அதே சமயம் கல்யாண்ராம் அங்குள்ள காவல்துறை அதிகாரிகளுடன் செல்ஃபி எடுப்பதையும் காண முடிந்தது. சாவடியை விட்டு வெளியேறும் முன் ராணா தனது விரலில் உள்ள மையை ஊடகத்தினர் முன்னிலையில் காட்டினார். மேலும் நானி மற்றொரு வாக்காளருடன் எளிமையாக உரையாடிக்கொண்டிருந்தனர்.
சாய் தரம் தேஜ் சமூக ஊடகங்களில் தனது மை வைத்த விரலின் படத்தைப் பகிர்ந்து, தனது ரசிகர்களை வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். அவர், "எனது மாநிலத்திற்கும் எனது நாட்டிற்கும் எனது 'சரியான' பொறுப்பை நிறைவேற்றினேன் .. நீங்கள் வாக்களித்தீர்களா???" என சாய் தரம் தேஜ் கூறினார். மேலும் சுதீர் பாபு மற்றும் அவரது மனைவி பத்மினி பிரியதர்ஷினி, இயக்குநர் சுகுமார் மற்றும் அவரது மனைவி தபிதா ஆகியோரும் தாங்கள் வாக்களித்ததற்கான அத்தாட்சியினை கையில் விரல் இருப்பதைக் காட்டினர். தனது தாய் மற்றும் மகளுடன் வாக்குச்சாவடிக்கு வந்த இயக்குநர் சேகர் கம்முலா, “இன்று வேலை நாளாக இருந்தாலும் அனைவரும் தங்கள் வாக்குரிமையை செலுத்த வேண்டும். உங்கள் வாக்களிக்கும் உரிமையை பொறுப்புடன் பயன்படுத்துங்கள். மாணவர்களும் இந்தப் பொறுப்பை தீவிரமாக எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், வெங்கடேஷ், ஜூனியர் என்டிஆர், ஸ்ரீகாந்த் போன்ற நட்சத்திரங்கள் ஏற்கனவே தங்கள் குடும்பத்தினருடன் வாக்களித்தனர்.
"அனைவரும் வாக்களிக்க வேண்டும்" என்று சிரஞ்சீவி செய்தியாளர்களிடம் கூறினார். அதேபோல் மகேஷ் பாபு, ராம் சரண் மற்றும் பிற நடிகர்களும் நாளுக்குப் பிறகு வாக்குச் சாவடிகளுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேம் சேஞ்சர் படப்பிடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டு, வாக்களிக்க ராம் சரண் மைசூரிலிருந்து பறந்து வந்துள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்