கோலகலமாக நடந்து முடிந்த நாக சைதன்யா சோபிதா திருமணம்! உற்சாகத்தில் நாகர்ஜூனா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கோலகலமாக நடந்து முடிந்த நாக சைதன்யா சோபிதா திருமணம்! உற்சாகத்தில் நாகர்ஜூனா!

கோலகலமாக நடந்து முடிந்த நாக சைதன்யா சோபிதா திருமணம்! உற்சாகத்தில் நாகர்ஜூனா!

Suguna Devi P HT Tamil
Dec 04, 2024 10:22 PM IST

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்கும் சிறப்பாக இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதற்கு நாகார்ஜூனா இருவருக்கும் அவரது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோலகலமாக நடந்து முடிந்த நாக சைதன்யா சோபிதா திருமணம்! உற்சாகத்தில் நாகர்ஜூனா!
கோலகலமாக நடந்து முடிந்த நாக சைதன்யா சோபிதா திருமணம்! உற்சாகத்தில் நாகர்ஜூனா!

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா கடந்த இரண்டு ஆண்டுகளாக டேட்டிங் செய்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இன்று அவர்கள் மிகச் சில விருந்தினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்தின் டிஜிட்டல் உரிமையை ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் ஆடம்பரமான விலையில் வாங்கியுள்ளது. எனவே, திருமண மண்டபத்திலிருந்து அதிக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவரவில்லை.

நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலாவின் திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினர்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. மெகா ஸ்டார் சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் பலர் இருந்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இயக்குனர் ராஜமௌலி மற்றும் சில கதாநாயகிகளும் கலந்து கொண்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர்களின் புகைப்படங்கள்  வெளியாகாததால், இந்த நிகழ்ச்சியில் யார் கலந்து கொண்டனர் என்பது குறித்து இதுவரை தெளிவு இல்லை.

நாகார்ஜூனா வாழ்த்து

இது குறித்து நடிகரும், நாக சைதன்யாவின் தந்தையுமான நாகார்ஜூனா அவரது ட்விட்டரில், ‘இந்த அழகான அத்தியாயத்தை சோபிதாவும் சாயும் ஒன்றாகத் தொடங்குவதைப் பார்ப்பது எனக்கு ஒரு சிறப்பு மற்றும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது. எனது அன்பான சாய்க்கு வாழ்த்துகள், அன்புள்ள சோபிதா-நீங்கள் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டு வந்துள்ளீர்கள். 

அவரது நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் நிறுவப்பட்ட ANR காருவின் சிலையின் ஆசீர்வாதத்தின் கீழ் இந்த கொண்டாட்டம் இன்னும் ஆழமான அர்த்தத்தைக் கொண்டுள்ளது. இந்த பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் நம்முடன் இருப்பது போல் உணர்கிறேன். 

இன்று நம் மீது பொழிந்திருக்கும் எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றியுடன் நன்றி கூறுகிறேன்.” எனக் குறிப்பிட்டுருந்தார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.