Viral pics: பொன்னியின் செல்வன் நடிகையுடன் நாக சைதன்யாவின் ஹாலிடே? உண்மை தகவல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Viral Pics: பொன்னியின் செல்வன் நடிகையுடன் நாக சைதன்யாவின் ஹாலிடே? உண்மை தகவல்

Viral pics: பொன்னியின் செல்வன் நடிகையுடன் நாக சைதன்யாவின் ஹாலிடே? உண்மை தகவல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Nov 26, 2022 01:46 PM IST

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா இணைந்திருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ள நிலையில், இருவரை பற்றியும் ஹாட் கிசுகிசு பரிமாற்றங்கள் இணையத்தில் பரவி வருகின்றன. ஏற்கனவே இருவரும் டேட்டிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சமூக வலைத்தளங்களில் லைரலாகும் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் லைரலாகும் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா புகைப்படங்கள்

இருவரும் நெருக்கமாக பழகி வரும் நிலையில் அவ்வப்போது ஜோடியாக பல இடங்களில் சுற்றி வருகிறார்கள். தற்போது லேட்டஸ்டாக இவர்கள் விடுமுறையை கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ளனர்.

பிளாக் அவுட்பிட் அணிந்து சோபிதா - நாக சைதன்யா இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் இருவரும் ட்ரெண்டாகியுள்ளனர். அவரவர் ரசிகர்கள் இந்த ஜோடியை ஆஹா, ஒஹோ என புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். புதிய ஜோடி தங்களது பயணத்தை தொடர்கிறார்கள் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் சிலர் அழகான மனைவியான சமந்தாவை பிரிந்து ஒரு வருடம் கூட முழுவதுமாக ஆகாத நிலையில், தற்போது அதற்குள் அடுத்த ஜோடியை தோடியுள்ளதாக நாக சைதன்யாவை திட்டியும் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

இந்தப் புகைப்படத்தை நாக சைதன்யா, சோபிதா துலிபாலா ஆகியோர் தங்களது சமூக வலைத்தளபக்கத்தில் பகிரவில்லை. இருப்பினும் தற்போது வைரலாகி ரசிகர்களுக்கு நல்ல விவாத பொருளாக மாறியுள்ளது.

அத்துடன் இந்த ஜோடியை பற்றி கடந்த சில மாதங்களாக தொடர்ந்து செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கும் நிலையில் இருவரும் இதைப்பற்றி வாய் திறக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகிறது. சோபிதா துலிபாலா இந்தியில் ஒரு படமும், ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

இவர் நடித்து முடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாகவுள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.