Mysskin: மாவீரன் படத்தில் மிஷ்கின் பாத்திரம் என்ன?
மாவீரன் படம் குறித்த தகவல்களை மிஷ்கின் பகிர்ந்துள்ளார்.
பிரபல இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர் மிஷ்கின். இவர் தற்போது வரவிருக்கும், மாவீரன் மற்றும் லியோ ஆகியவற்றில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'லியோ' படத்தில் மிஷ்கின் தனது பாத்திரத்தை வெளிப்படுத்தினார். மேலும் அவர் படத்தில் ஒரு குறுகிய எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
மிஷ்கின் இப்போது 'மாவீரன்' படத்தில் தனது பாத்திரம் குறித்த ரகசியத்தை வெளிப்படுத்தி உள்ளார். அத்துடன் படம் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார் .
அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “மாவீரன் படத்தின் முக்கிய வில்லனாக மிஷ்கின் நடித்து வருகிறேன். மேலும் படத்தில் சிவகார்த்திகேயனுடன் கடுமையாகப் போராடும் வகையில் எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து வித ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் மடோன் அஸ்வின் படத்தை இயக்கி வருகிறார். மாவீரன் படத்தில் லோக்கலான வில்லனாக பாரம்பரிய உடையான வேஷ்டி மற்றும் சட்டையில் நடித்திருக்கிறேன் “ என்றார்.
சிவகார்த்திகேயன் இப்படத்தில் ரிஸ்க் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறார். ஸ்டண்ட் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட்மேன் யானிக் பென் கையாள்கிறார், இவர் 'புலி முருகன்', 'வெந்து தணிந்தது காடு', 'ஜவான்' மற்றும் பல இந்திய படங்களில் பணிபுரிந்துள்ளார்.அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார். படத்தின் டப்பிங் மற்றும் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஜூலை மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாக உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்