My Perfect Husband: சத்யராஜ் முதல் ஓடிடி தொடர்..! எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட்
சத்யராஜ் முதல் ஓடிடி தொடர் ஆக இருக்கும் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் ட்ரெயலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஓடிடி வெப் தொடர் வெளியாகும் தேதி, இதர தகவல்களை பார்க்கலாம்

ஓடிடி சீரிஸில் நடிக்கும் தமிழ் சினிமாவின் அடுத்த ஹீரோவாக சத்யராஜ் மாறியுள்ளார். இவர் நடித்திருக்கும் புதிய வெப் தொடர் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட். இதில் சத்யராஜ் ஜோடியாக சீதா நடித்துள்ளார். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரேகா நடித்துள்ளார். அதேபோல் ரக்ஷன், வர்ஷா பொல்லம்மா, லிவிங்ஸ்டன், ரேஷ்மா பசுபுலேட்டி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
டிஸ்னி ப்ளஸ் ஹாட்ர்ஸ்டாரில் வெளியாக இருக்கும் மை பெர்பெக்ட் ஹஸ்பெண்ட் வெப் தொடரின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜனரஞ்சகமான கதை
அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய பொழுதுபோக்கு நிறைந்த ஜனரஞ்சக படைப்பாக மை பெர்பெக்ட் ஹைஸ்பெண்ட் உருவாகியிருப்பதாக கூறப்பட்டுள்ளது. ரெட்டைச்சுழி, ஆண் தேவதை படங்களை இயக்கிய தாமிரா, நிர்மல் குமார் ஆகியோர் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ஆர்தல் வில்சன். எடிட்டிங் - பார்த்தசாரதி. வித்யாசாகர் இசையமைத்துள்ளார்.
