Vidyasagar: ‘ஆமாம் எனக்கு வாய்ப்பில்லை.. அதை சொல்ல என்ன தயக்கம்?’ வித்யாசாகர் ‘நச்’ பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vidyasagar: ‘ஆமாம் எனக்கு வாய்ப்பில்லை.. அதை சொல்ல என்ன தயக்கம்?’ வித்யாசாகர் ‘நச்’ பேட்டி!

Vidyasagar: ‘ஆமாம் எனக்கு வாய்ப்பில்லை.. அதை சொல்ல என்ன தயக்கம்?’ வித்யாசாகர் ‘நச்’ பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
May 07, 2023 05:30 AM IST

Music Director Vidyasagar: ‘எந்த ராகமும் நான் தருவதில்லை. கடவுள் தான் கொடுக்கிறார், நாம் அதை தருகிறோம். அதை புரிந்து கொண்டால் போதும். என்னுடைய அறிவு, நான் தான் என்று நினைக்க கூடாது’

இசையமைப்பாளர் வித்யாசாகர்  -கோப்புபடம்
இசையமைப்பாளர் வித்யாசாகர் -கோப்புபடம்

‘‘2010 வரை நான் இசையில் பயங்கர ஆக்டிவா இருந்தேன். அந்த தலைமுறையில் இருந்தவர்களும் சரி, அதன் பின் வந்த தலைமுறைகளை சேர்ந்தவர்களும் சரி, தலைமுறை கடந்து என் இசை மீது கொண்டுள்ள காதல் எனக்கு பயங்கர மகிழ்ச்சியை தருகிறது. எனது இசை வெளியாகும் போது எந்த விருப்பம் இருந்ததோ, அதே விருப்பம் இப்போதும் இருக்கிறது. 

‘மெலோடி கிங்’ என்று ரசிகர்கள் அழைப்பது, அன்பின் வெளிப்பாடு. நான் இசையமைக்கும் போது இங்கு இருந்த சூழ்நிலையில், நான் கொடுத்த மொலோடிஸ் அவர்களை கவர்ந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதற்காக மெலோடிஸ் மட்டும் ரசிக்கவில்லை, எல்லாவிதமான பாடல்களையும் நான் கொடுத்திருக்கிறேன். அதை அவர்கள் அனைவரும் ரசித்திருக்கிறார்கள். 

பெரும்பாலும் என்னுடைய மெலோடிகள் ‘தர்பாரி’ ராகத்தில் உருவாக்கப்பட்டவை. எந்த ராகமும் நான் தருவதில்லை. கடவுள் தான் கொடுக்கிறார், நாம் அதை தருகிறோம். அதை புரிந்து கொண்டால் போதும். என்னுடைய அறிவு, நான் தான் என்று நினைக்க கூடாது. எல்லாவற்றையும் முடிவு செய்பவன் கடவுள் தான், நாம் இல்லை. 

இயக்குனர் ஒரு ஆக்‌ஷன் காட்சியை சொல்லும் போது, அதற்கு ஏற்ற பாடலை தருவது என்னுடைய வேலை. அப்படி தான் குருவி படத்தில் ‘குருவி குருவி அடிச்சா..’ அதே போல தூள் படத்தில் ‘சிங்கம் போல…’ பாடல்களை அமைத்தேன். சிங்கம் போல பாடலை தூள் படத்தின் க்ளைமாக்ஸில் வைக்க ஒரு கட்டத்தில் தரணி மறுத்துவிட்டார்.

அதை அறிந்து நான் போய் தரணியிடம் கேட்டேன், ‘ஏன் இந்த பாடலை மிக்ஸ் செய்யவில்லை?’ என்று. அவர், ‘இது தேவையில்லை என்று நினைக்கிறேன்’ என்ற கூறினார். ‘இந்த பாடல் இல்லை என்றால், நான் இந்த படத்தில் பண்ண மாட்டேன்’ என்று கூறிவிட்டேன். போராடி தான் அந்த பாடலை படத்தில் சேர்த்தேன். பின்னர் அந்த பாடல் தான் படத்தில் பெரிய பலமாக அமைந்தது. 

இசையமைப்பாளராக ஒரு படத்தின் பாடலை எவ்வளவு சிறந்ததாக உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் தான் முதலில் இருக்கும். நாளை வேறொரு படத்தில் அதை விட சிறந்த பாடலை வழங்க வேண்டும் வேறு. அது தான் எனக்கு வேலை செய்தது. என்னுடைய படங்கள் சில சுமாராக போனால் கூட, பாடல்கள் காலம் தாண்டியும் பாராட்டப்படுகிறது. 

சமீபமாக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, நான் படங்கள் பெரிதாக பண்ணவில்லை என்றும் நான் நினைக்கவில்லை. மறுபடியும் நான் படங்களில் இசையமைக்கப் போகிறேன். இடையிலும் நான் படங்கள் செய்து கொண்டு தான் இருந்தேன். மெயின் ஸ்ட்ரீம்ல வரும் படங்களில் எண்ணிக்கை அதில் குறைவாக இருந்தது. படங்கள் கம்மியாகிவிட்டது என்றால் கம்மியாக இருப்பதை கம்மியாகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் . இது எல்லாருக்கும் தெரிந்த விசயம். அதில் மறைத்து சொல்ல எதுவும் இல்லை. 

மலையாளத்தில் நிறைய படங்களில் நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் தமிழில் அவ்வப்போது படங்கள் வரும். அதெல்லாம் மாறிடும். சென்னையில் என்னுடைய இசை விழா நடக்கிறது. அது முடிந்ததும், எனக்கு நிறைய வாய்ப்புகள் வரும் என நினைக்கிறேன். புதுசு வந்துட்டே இருக்கும். அதை மக்கள் எந்த அளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை வைத்து தான் வெற்றி வருகிறது. இன்றைய சினிமாவில் படத்தின் ஒரு முக்கிய பகுதியாக பாடல் இல்லாமல் போய்விட்டதாக நான் கருதுகிறேன். எல்லாமே பின்னணி இசை போல இருந்தால், பாடல் என்றால் பாட வேண்டுமே? அது இப்போதுள்ள சினிமாவில் எங்கேயோ மிஸ் ஆகிறது,’’

என்று அந்த பேட்டியில் வித்யாசாகர் கூறியுள்ளார். 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.