National Film Awards 2023: 'கருவறை' படத்துக்காக தேசிய விருதை வென்றாா் ஸ்ரீகாந்த் தேவா!
'கருவறை' குறும்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 2021-ஆம் ஆண்டுக்கான 69-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் மாலை 5 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம், சிறந்த இசை உள்ளிட்ட பிரிவுகளுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 2021ஆம் ஆண்டுக்கான, குறும்படங்களுக்கான சிறப்பு பிரிவில் ’கருவறை’ படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இவி.கணேஷ்பாபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் 'கருவறை' குறும்படத்திற்காக அதன் இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் ரித்விகா, மிதுன், வடிவுக்கரசி, அஞ்சனா தமிழ்ச்செல்வி,ரோகிணி ஆகியோர் நடிப்பில் உருவான குறும்படம் 'கருவறை' . இராஜராஜன் ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த்தேவா இசையில், சுராஜ்கவி படத்தொகுப்பில், UKl ஐயப்பன் (சவுண்ட்) ஒலிப்பதிவில், மனோ கலை இயக்கத்தில், இள.வாசுதேவன், ராஜன்கோவிந்தராஜன் ஆகியோர் நிர்வாக தயாரிப்பில், PRO சதீஷ் (AIM) மக்கள் தொடர்பில் உருவாகி இருக்கிறது 'கருவறை. இப்படத்தில் பாடல்கள் கிடையாது.
குழந்தையின்மையால் பல லட்சம் மக்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்டில்தான், வறுமையினால் பல லட்சம் உயிர்கள் கருவிலேயே கலைக்கப்படுகிறது. இந்த அவலம் பற்றி ‘கருவறை ’ பேசுகிறது என்கிறார் இயக்குனர் இவி.கணேஷ்பாபு.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்