Yuvan Shankar Raja: ‘20 லட்சம் பாக்கி சாமி.. வாடகையே தரல.. எஸ்கேப் ஆக ட்ரை பண்றார்’ -யுவன் மீது காவல்நிலையத்தில் புகார்!-music composer yuvan shankar raja has been lodged a complaint at the police station - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Yuvan Shankar Raja: ‘20 லட்சம் பாக்கி சாமி.. வாடகையே தரல.. எஸ்கேப் ஆக ட்ரை பண்றார்’ -யுவன் மீது காவல்நிலையத்தில் புகார்!

Yuvan Shankar Raja: ‘20 லட்சம் பாக்கி சாமி.. வாடகையே தரல.. எஸ்கேப் ஆக ட்ரை பண்றார்’ -யுவன் மீது காவல்நிலையத்தில் புகார்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 17, 2024 11:38 PM IST

Yuvan Shankar Raja: 2 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் இருக்கும் எனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். - யுவன் மீது புகார்!

Yuvan Shankar Raja: ‘20 லட்சம் பாக்கி சாமி.. வாடகையே தரல.. எஸ்கேப் ஆக ட்ரை பண்றார்’ -யுவன் மீது காவல்நிலையத்தில் புகார்!
Yuvan Shankar Raja: ‘20 லட்சம் பாக்கி சாமி.. வாடகையே தரல.. எஸ்கேப் ஆக ட்ரை பண்றார்’ -யுவன் மீது காவல்நிலையத்தில் புகார்!

யுவன் மீது பரபரப்பு புகார்!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் யுவன் ஷங்கர் ராஜா. இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லேக் பகுதியில் வசித்து வந்தார்.இந்த வீடு அஜ்மத் பேகம் என்பவருக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவரது சகோதரர் முகமது ஜாவித், யுவன் மீது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்து இருக்கிறார்.

அந்த புகாரில், “ இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2 வருடங்களாக சென்னை நுங்கம்பாக்கம் லேக் பகுதியில் இருக்கும் எனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார். அவர் என்னுடைய சகோதரிக்கு 20 லட்சம் வரை வாடகை பாக்கி வைத்திருக்கிறார். இது குறித்து என்னுடைய சகோதரி கேட்கும் போதெல்லாம் யுவன் அதனை தர மறுத்து வந்திருக்கிறார்.

வீட்டை காலி செய்ய முயற்சி

இந்த நிலையில் இது குறித்து கேட்க, நான் அவரை போன் மூலம் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் போனை எடுக்க வில்லை. இதற்கிடையே வீட்டில் இருந்து அவர் பொருட்களை எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருப்பதாக அருகில் வசிப்பவர்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக அவர் பொருட்களை எடுத்து வீட்டை காலி செய்ய முயற்சித்து வருகிறார்.

ஆகையால் இது தொடர்பாக விசாரணை நடத்தி வாடகை மற்றும் சேதத்துக்கான இழப்பீட்டை பெற்று தர வேண்டும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். யுவன் மீது சாட்டப்பட்டுள்ள இந்தக்குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இது குறித்து யுவன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.