RIP Captain Vijayakanth: விஜயகாந்த் மறைவு.. படப்பிடிப்பு இன்று ரத்து
RIP Captain: விஜயகாந்த் மறைவுயொட்டி இன்று ஒரு நாள் படப்பிடிப்புகள் அனைத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.
Captain Vijayakanth Passed Away: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இருமல், சளி மற்றும் தொண்டை வலி பாதிப்பு அவருக்கு இருந்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே விஜயகாந்த் சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு இருந்தது.
அவரது உடல் நிலை சற்று தேறிய நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி விஜயகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி அன்று உடல் நிலை குறைவு காரணமாக மீண்டும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உயிர் நேற்று ( டிச. 28) காலை 6.10 மணிக்கு பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று ( டிச 29) படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதே போல் திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்பட்டு உள்ளது.
முன்னதாக நேற்று ( டிச. 28) விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனியார் சேனலிடம் பேசிய திருப்பூர் சுப்பிரமணியம் , ‘விஜயகாந்த் மறைவுக்கு திரைப்பட விநியோகஸ்தகர் சங்கத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம். விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தமிழ்நாடு முழுவதும் இன்று தியேட்டர்களில் காலை காட்சி ரத்து செய்யப்படுகிறது’ என தெரிவித்து உள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்