“யாரு இவரு தளபதியா..? அமரன் படத்துக்கு டிக்கெட் அனாமத்தா கிடக்கு.. இனிமேல் அதெல்லாம் கிடையாது” - சிவாவை தாக்கிய மோகன் ஜி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  “யாரு இவரு தளபதியா..? அமரன் படத்துக்கு டிக்கெட் அனாமத்தா கிடக்கு.. இனிமேல் அதெல்லாம் கிடையாது” - சிவாவை தாக்கிய மோகன் ஜி

“யாரு இவரு தளபதியா..? அமரன் படத்துக்கு டிக்கெட் அனாமத்தா கிடக்கு.. இனிமேல் அதெல்லாம் கிடையாது” - சிவாவை தாக்கிய மோகன் ஜி

Kalyani Pandiyan S HT Tamil
Oct 29, 2024 11:47 AM IST

பிரபல இயக்குநரான மோகன் ஜி அமரன் படத்தில் நடித்திருக்கும் சிவகார்த்திகேயனை விமர்சனம் செய்திருக்கிறார்.

“யாரு இவரு தளபதியா..? அமரன் படத்துக்கு டிக்கெட் அனாமத்தா கிடக்கு.. இனிமேல் அதெல்லாம் கிடையாது” - சிவாவை தாக்கிய மோகன் ஜி
“யாரு இவரு தளபதியா..? அமரன் படத்துக்கு டிக்கெட் அனாமத்தா கிடக்கு.. இனிமேல் அதெல்லாம் கிடையாது” - சிவாவை தாக்கிய மோகன் ஜி

போலித்திருமணம், நாடகக் காதல் ஆகியவற்றை மையக்கருவாக கொண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. அதனைத்தொடர்ந்து மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படமும் விவாதத்தை எழுப்பியது. படங்கள் மட்டுமல்ல இவர் ஜாதி குறித்து பேசும் பேட்டிகளும் சமூக வலைதளங்களின் வைரல் ரகம்தாம்.

இதனால் மோகன் ஜிக்கு ஜாதி வெறியன் என்ற முத்திரையையும் சிலர் குத்தினர். இவரது இயக்கத்தில் அண்மையில் வெளியான பகாசூரன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் இவர் சிவகார்த்திகேயன் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ டிக்கெட் ப்ரஷ்ஷரே இல்ல... தல, தளபதி படம் வந்தாதான் திரையங்கிற்கு தீபாவளி. இதுக்கு அப்புறம் அதெல்லாம் அவ்வளவுதான் போல” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

அமரன் திரைப்படம்

சிவகார்த்திகேயன் நடிப்பில், ‘ரங்கூன்’ புகழ் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘அமரன்’. India's Most Fearless: True Stories of Modern Millitary புத்தகத்தில் இடம் பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்று அடிப்படையாகக்கொண்டு இந்தப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்தப்படத்தில் முகுந்தின் மனைவியான இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய்பல்லவி நடித்திருக்கிறார்.

மலேசியாவில் நடந்த ‘அமரன்’ புரோமோஷன் நிகழ்வில், இந்தக்கதைக்கு சிவகார்த்திகேயனை கதாநாயகனாக தேர்ந்தெடுத்தது ஏன் என்பதற்கான காரணத்தை ராஜ்குமார் பெரியசாமி பேசினார்.

ஏன் சிவகார்த்திகேயன்?

அவர் பேசும் போது, “ முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் நான் யாரை வேண்டுமென்றாலும் நடிக்க வைத்திருக்கலாம். ஆனால் எனக்கு ஒரு சராசரி மனிதனின் முகம் தேவைப்பட்டது. அவர் ஒரு சராசரி மனிதனுக்கான அடையாளத்தை அவர் பிரதிபலித்ததால் அவரை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தேன். இன்னும் 10 வருடம் கழித்து, இன்னும் பெரிய நட்சத்திர அந்தஸ்தில் சிவா இருந்தாலும் கூட, அவருக்கு அந்த சராசரி மனிதனுக்கான அடையாளம் இருக்கும்.” என்று பேசினார்.

 

இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர் நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தோடு சேர்த்து, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ், நிறுவனம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார்.படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

சிவகார்த்திகேயனின் சம்பளம் என்ன?

இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ் என்ற புத்தகத்தில் இருந்து, இக்கதையை எழுதி, திரைக்கதை அமைத்துள்ளார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இப்படம் ரூ. 150 கோடி முதல் 200 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை பெறுவதாக தெரியவருகிறது. மேலும், பழைய கார்த்திக் நடித்த அமரன் படக்குழுவினரிடம், அனுமதி பெற்றபின், இப்படத்தின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்பட்டது.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.