Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!-mk stalin praise mari selvaraj vaazhai from san francisco - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!

Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 02, 2024 12:37 PM IST

Vaazhai: உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!

Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!
Vaazhai: ‘ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார்’ - வாழை இயக்குநர் மாரிசெல்வராஜிற்கு முதல்வர் பாராட்டு!

இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், “ உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்

பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்!" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

கதை திருட்டு சர்ச்சையில் வாழை

முன்னதாக, மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வாழை’. இந்தப்படம் மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. தான் சிறுவயதில் பட்ட துன்பங்களை அடிப்படையாக வைத்து மாரி உருவாக்கி இருந்த இந்தத்திரைப்படத்திற்கு, பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இதற்கிடையே இந்தப்படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் சோ தர்மன் பேட்டி கொடுத்திருந்தார்.

 

அந்த பேட்டியில், “வாழை படத்தை பார்த்த என்னுடைய நண்பர்கள் என்னுடைய வாழையடி சிறுகதையில் இருக்கும் விஷயங்கள் அப்படியே வாழை படத்தில் இருப்பதாக கூறினார்கள். வாழை படத்தில் உள்ள அனைத்தையுமே நான் என்னுடைய சிறுகதையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன். ஆனால், படத்தில் சினிமாவுக்காக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. என்னுடைய கதையை மாரி செல்வராஜ் படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி - கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவை அப்படியே அதில் இருக்கின்றன. ஆகையால் நான் தான் அதற்கு முழு உரிமையானவன்” என்று பேசினார்.

பதிலடி கொடுத்த மாரி

இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மாரிசெல்வராஜ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார்.

முன்னதாக, மாரிசெல்வராஜ் தன்னுடைய படங்களில் பிளாக் அண்ட் ஒயிட் நிறங்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பது குறித்து பேசிய பேட்டி இங்கே!

பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும்.

இது குறித்து அவர் பேசும் போது, “எனக்கு பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடிக்கும். எனக்கு இன்னமும் பழைய நினைவுகள்தான் ஞாபகம் இருக்கிறது. புதியதாக நான் இன்னும் வாழ ஆரம்பிக்கவில்லை. நான் புதிதாக வாழ்கிறேன் என்று கூறினால், இப்போது என்னுடைய பிள்ளைகளோடு வாழும் வாழ்க்கைதான் என்னுடைய புதிய வாழ்க்கை.

புதிதாக வாழும் இந்த வாழ்க்கையில் கூட, நான் அவர்களுடன் பழைய கதைகளைதான் பேசிக் கொண்டிருக்கிறேன். பிளாக் அண்ட் ஒயிட் மிகவும் பிடித்ததற்கான காரணம் என்னவென்றால், அம்மா அப்பாவின் போட்டோ ஒன்று வீட்டில் இருந்தது. அது பிளாக் அண்ட் ஒயிட்டாக இருந்தது. அது ஒன்று தான் அவர்களிடம் இருந்த ஒரே போட்டோ.

நிறமும், முகமும் என்னுடன்

அந்த போட்டோவை சிறுவயதில் பார்த்து, பார்த்து அதில் இருக்கும் நிறமும், முகமும் என்னுடன் மிகவும் கனெக்ட் ஆகிவிட்டன. அதனால் நான் நிறங்கள் அடங்கிய விஷயங்களை பார்க்கும் போது எனக்கு அதில் பெரிதாக ஆர்வமே இல்லை.

நாம் நிறங்கள் கொண்ட உலகில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் ஏதோ ஒன்று என்னுடைய கதையை ஞாபகப்படுத்துவதற்கு, எனக்கு உதவி செய்வதற்கு, அந்த பிளாக் அண்ட் ஒயிட் எனக்கு உதவுகிறது. என்னுடைய வீட்டில் என்னுடைய குழந்தைகளின் புகைப்படங்கள் பிளாக் அண்ட் ஒயிட்டில் இருக்கின்றன.

அந்த புகைப்படத்தை நான் பார்க்கும் பொழுது, அந்த புகைப்படத்தை எடுத்த நாளன்று அவள் என்ன செய்தாள் என்பது அப்படியே என் நினைவுக்கு வந்து விடும். ஆனால் அதை அப்படியே கலரில் போட்டால் அதன் பெரும்பான்மையான நினைவுகளை மறந்து விடுகிறேன். சினிமா இவ்வளவு பெரிய விஷயமாக முன்னேறி வளர்ந்த பின்னும், சில விஷயங்களை நாம் கடத்துவதற்கு பிளாக் அண்ட் ஒயிட் நிறத்தைதான் நாம் தேர்ந்தெடுக்கிறோம்.” என்று பேசினார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.