Vanangaan: ‘காப்புரிமை சட்டத்தின் கீழ் தலைப்புக்கு உரிமை கோர முடியாது’ - வணங்கான் படத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
படத்தின் கதைக்கரு உள்ளிட்ட விவகாரங்களுக்குத்தான் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியும். பட தலைப்புக்கு காப்புரிமை சட்டத்தின் கீழ் உரிமை கோர முடியாது என வாதம் முன்வைக்கப்பட்ட நிலையில் வணங்கான் படத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வணங்கான் படத்துக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் படத்தை வெளியிட எவ்வித தடையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணங்கான் தலைப்பு தடை கோரி மனு
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் உரிமையாளர் எஸ்.சரவணன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், வணங்கான் என்ற தலைப்பை வணங்கான் என்ற தலைப்பை கடந்த 2020ஆம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். மத்திய வர்த்தக துறையின் வணிக சின்ன விதிகளின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும், தொடர்ந்து புதுப்பித்து வந்துள்ளேன். "வணங்கான்" என்ற தலைப்பை பயன்படுத்தி, பாலாவின் படத்தை வெளியிட அனுமதித்தால் தனக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும்.
எனவே வணங்கான் தலைப்பை இயக்குநர் பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தங்களது படத்துக்கு பயன்படுத்தகூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்" என கோரியிருந்தார்.