Director Visu: ஏ.வி.எம்.,சரவணன் போட்ட கண்டிஷன்.. தேசிய விருதை கையில் கொடுத்த விசு; பிசினஸ் கிளாஸ் டிக்கெட் சம்பவம்!
சரவணன், உங்களது படத்தை நான் தயாரிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு கார்தான் கொடுப்பேன். ஒரு செட்தான் கொடுப்பேன் என்று கூறி நெருக்கி பிடித்து பட்ஜெட்டை கொடுத்தார்.
இயக்குநர் விசுவுக்கும், ஏ.வி.எம்., சரவணனுக்கும் இடையே நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை, கரு பழனியப்பன் அண்மையில் மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.
அவர் பேசும் போது, “ தொடர் தோல்விகளைச் சந்தித்து இருந்த விசு சம்சாரம் அது மின்சாரம் படத்தை தயாரிக்கும் படி ஏ.வி.எம் சரவணனிடம் போய் நின்றார்.
சரவணன், உங்களது படத்தை நான் தயாரிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு ஒரு கார்தான் கொடுப்பேன். ஒரு செட்தான் கொடுப்பேன் என்று கூறி நெருக்கி பிடித்து பட்ஜெட்டை கொடுத்தார். விசு எடுத்த அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. கூடவே அந்த திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றுவிட்டது.
இதனையடுத்து ஏவிஎம் சரவணன் விசுவை அணுகி, படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுவிட்டது. தேசிய விருதும் கிடைத்துவிட்டது. இந்த பிரமாண்ட வெற்றியை கொடுத்த உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டது.
அதற்கு விசு, நான் தேசிய விருது வாங்குவதை என்னுடைய குடும்பமே விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் வந்து பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இந்த நிலையில் ஏவிஎம் சரவணன் விசு உட்பட அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் விமானத்தில் பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டை போட்டுக் கொடுத்து அழைத்துச் சென்றார்.
ஆனால் அவரோ சாதாரணமான சீட்டில் உட்கார்ந்து வந்தார். இதனைப் பார்த்த விசுவுக்கு பதட்டம் தொற்றிக்கொண்டது. இதனையடுத்து அவர் ஏவிஎம் சரவணனிடம் ஏன் இங்கே அமர்ந்து இருக்கிறீர்கள். என்னுடைய பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டில் அமர்ந்து கொள்ளுங்கள் என்றார். ஆனால் ஏவிஎம் சரவணன் விசு நீங்கள் எங்களுக்கு ஒரு வெற்றிப்படம் கொடுத்து மிகப்பெரிய மகிழ்ச்சியை எங்களுக்கு தந்திருக்கிறீர்கள்.
அப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஒன்றை நாங்கள் கொடுக்க வேண்டும். முதலாளி நான் சாதரணமான சீட்டில் உட்கார்ந்து, நீங்கள் பிசினஸ் கிளாஸ் சீட்டில் உட்கார்ந்து வந்தால்தான் உங்களது குடும்பம் மகிழ்ச்சியை உணரும்” என்று பேசினார்.
டாபிக்ஸ்