Meera Mithun: நடிகை மீரா மிதுன் மாயம்; கண்டுபிடித்து தருமாறு தாயார் புகார்
நடிகை மீரா மிதுனை காணவில்லை என அவரின் தாயார் சியமாளா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மீரா மிதுன்
நடிகை மீராம் மிதுன் தனது ஆண் நண்பருடன் சேர்ந்து ஆல்பம் பாடல்கள் வெளியிடுவது, ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுவது என வாடிக்கையாக செய்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பு பட்டியலினத்தவர் குறித்து அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார்
அது மிகப் பெரிய சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் மீரா மிதுனுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவரது நண்பர் சாம் அபிஷேக்கும் கைது செய்யப்பட்டு பின்பு நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, மீரா மிதுன் ஆஜராகவில்லை. தொடர்ந்து இரண்டு முறை நீதிமன்றத்தில், மீரா மிதுன் ஆஜராகாமல் இருந்ததால் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது.
