Meena: இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் உள்ளதா? - மீனா பளீச் பதில்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meena: இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் உள்ளதா? - மீனா பளீச் பதில்

Meena: இரண்டாவது திருமணம் செய்யும் எண்ணம் உள்ளதா? - மீனா பளீச் பதில்

Aarthi V HT Tamil
Mar 24, 2023 11:52 AM IST

நடிகை மீனா தனது இரண்டாவது திருமணம் குறித்து பரவி வரும் வதந்தி குறித்து விளக்கமளித்துள்ளார்.

மீனா
மீனா

நடிகை மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினியரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார்.

மீனாவின் மகளும் தெறி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு ஏகப்பட்ட விருதுகள் கிடைத்தன.

இதனிடையே கடந்த ஆண்டு ஜூலை மாதம் மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். இவருடைய இறப்பிற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்தனர். கணவர் பிரிவால் வாடிய மீனாவை சக நடிகைகள் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று மனதை மாற்றினார்கள்.

தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். சமீபத்தில் தனியார் யூ-டியூப் சேனல் அவரின் 40 ஆண்டு திரை வாழ்க்கையை வெகுவாக கொண்டாடினார்கள்.

இந்நிலையில் மீனாவின் கணவர் உயிரிழந்து ஒரு வருடம் கூட முடியாத நிலையில் அதற்குள் அவர் இரண்டாவது திருமணம் செய்யப் போகிறார் என்ற தகவல் பரவி வருகிறது.

இது குறித்து பேசிய அவர், "என் கணவர் இப்போது என்னுடன் இல்லை என்பதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.

அதற்குள் எப்படி இது போன்ற வதந்திகள் பரவி வருகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இப்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் திரைப்படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தப் போகிறேன்.

என் மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவேன், இதுதான் எனக்கு முக்கியம். வேறு எந்த எண்ணமும் எனக்கு இல்லை” என்றார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.