Meena: ஹீரோயினாக இருந்தால் மட்டும் ஏன் எப்படி? - மறுமணம் கேள்வியால் கடுப்பான மீனா
நடிகை மீனா தனது மறுமணம் தொடர்பாக பேட்டி அளித்தார்.

மீனா
நடிகை மீனா தனது இரண்டாவது திருமணம் குறித்த வதந்திகளுக்கு பதிலளித்து உள்ளார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டுமே நாயகனாகவும் , நாயகியாகவும் வெற்றி கனியை சுவைக்கிறார்கள்.
அப்படி ஒருவர் தான் நடிகை மீனா; இவர் சிவாஜி , ரஜினிகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார் .
1990 ல் தெலுங்கில் ' நவயுகம்' என்ற படத்தின் மூலம் 15 வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். அதற்கு பிறகு மீனாவுக்கு தமிழில் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அஜித்துக்கு ஜோடியாக விஜயகாந்த், ரஜினி, கமல் ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ், முரளி, கார்த்திக், மீனா, சிட்டிசன், வில்லன் என தமிழ் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த மீனா, விஜய்யுடன் ஷாஜகான் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டுமே நடித்துள்ளார்.