Director Vittalacharya: தென்னிந்திய சினிமாவின் மாயாஜால மன்னன் - VFX காட்சிகளின் முன்னோடி விட்டலாச்சாரியா நினைவு நாள்
கன்னடம்,தெலுங்கு மொழிகளில் மட்டும் படம் இயக்கியிருந்தாலும் தமிழ் ரசிகர்களாலும் பெரிதும் போற்றப்பட்ட இயக்குநராக இருந்தவர் விட்டலாச்சாரியா. தென்னிந்திய சினிமாவில் விஷுவல் எபெக்ட்ஸுக்கு முன்னோடியாக இவர் திகழ்ந்துள்ளார்.
இந்திய சினிமாக்கள் காதல், பேமிலி செண்டிமெண்ட், காமெடி, இவை அனைத்தும் கலந்த ஜனரஞ்சக சினிமா என்கிற ஜானரில் சென்றுகொண்டிருக்க, திகில் ஜானரை நன்கு பிரபலப்படுத்தியதோடு , ரசிகர்களையும் அதற்கு Adapt செய்ய வைத்து இயக்குநராக திகழ்ந்தவர் விட்டலாச்சாரியா.
இயக்குநர், தயாரிப்பாளர் என திரையுலகில் இருந்து வந்த இவர் விட்டல் புரொடக்ஷன் மூலம் எண்ணற்ற திகில் படங்களை தயாரித்து, இயக்கியுள்ளார்.
கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்த விட்டலாச்சாரியா, 1953இல் ராஜ்யலட்சுமி என்ற படம் மூலம் அறிமுகமானார். ஆரம்பத்தில் கன்னட படங்களை எடுத்த இவர் பின்னர் தெலுங்கு சினிமாக்களை இயக்குவதில் ஆர்வம் காட்டியதோடு, தெலுங்கில் முக்கிய இயக்குநராக உருவெடுத்தார்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்டி ராமா ராவ்வை வைத்து 19 படங்களில் இயக்கியுள்ளார். தமிழில் இவர் பெண் குலத்தின் பொன் விளக்கு என்ற ஒரேயொரு படத்தை மட்டும் இயக்கியுள்ளார்.
விட்டலாச்சரியா படங்களின் ஸ்பெஷலிட்டியான விஷயமே நாம் தற்போது ஸ்பெஷல் எபெஃக்ட்ஸ், விஷுவல் எபெஃப்ட்ஸ் என்று அழைக்கு விஷயம்தான். அந்த காலகட்டத்தில் மாயஜால காட்சிகள் என்று கூறப்படும் இவை, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் சிரிக்கவும், திகிலூட்டவும் செய்தது. கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில் முற்றிலும் கேமரா, எடிட்டிங் ட்ரிக்குகளால் உருவாக்கப்படும் இந்தக் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களிடம் ஏக போக வரவேற்பை பெற்றன.
இதுபோன்று காட்சியமைப்புகளால் இவரை ரசிகர்கள் மாயாஜால மன்னன் என்றே அழைத்தார்கள். விட்டலாச்சாரியா படங்களில் டாப் ஹீரோக்கள் இருக்கமாட்டார்கள். கிளிஸோவான திரைக்கதையுடன் படம் அமைந்திருந்தாலும் அதில் இடம்பெறும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகளுக்காகவே படம் சூப்பர் ஹிட்டாகி பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பியது.
தென்னிந்திய சினிமாவில் விஷுவல் எபெக்ட்ஸுக்கு முன்னோடியாக இவர் திகழ்ந்த இவர் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார், இவர் இயக்கிய ஜெகன் மோகனி இன்றளவும் பேசப்படும் படமாக உள்ளது.
வோடோபோன் விளம்பரத்தில் வரும் ஸு ஸு பொம்மைகளை பார்த்திருக்கிறோம். ஆனால் அதற்கு இன்ஸ்பிரேஷனாக விட்டலாச்சாரியா படத்தில் வரும் குட்டிசாத்தான் கதாபாத்திரம்தான் என அடித்து சொல்லும் அளவுக்கு 1960, 70களிலியே வேற லெவலில் கற்பனை செய்து அந்த கதாபாத்திரத்தை வடிவமைத்திருப்பார்.
1953 முதல் 39 வருடங்கள் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என ஜொலித்த விட்டலாச்சாரியா, 1992ஆம் ஆண்டு மே மாதம் இதே நாளில்தான் உயிரிழந்தார்.
டாபிக்ஸ்