'அடிச்சு கொன்னு போட்ருவேன்' 5 வயசு பையனிடம் இரக்கமில்லாமல் நடந்த டைரக்டர்.. சூரியவம்சம் படத்தில் இப்படி ஒரு சம்பவமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  'அடிச்சு கொன்னு போட்ருவேன்' 5 வயசு பையனிடம் இரக்கமில்லாமல் நடந்த டைரக்டர்.. சூரியவம்சம் படத்தில் இப்படி ஒரு சம்பவமா?

'அடிச்சு கொன்னு போட்ருவேன்' 5 வயசு பையனிடம் இரக்கமில்லாமல் நடந்த டைரக்டர்.. சூரியவம்சம் படத்தில் இப்படி ஒரு சம்பவமா?

Malavica Natarajan HT Tamil
Nov 02, 2024 09:03 AM IST

சூரியவம்சம் படத்தில் நடிக்க வந்தபோது, இயக்குநர் விக்ரமன் தன்னை அடித்து கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக மாஸ்டர் மகேந்திரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

'அடிச்சு கொன்னு போட்ருவேன்' 5 வயசு பையனிடம் இரக்கமில்லாமல் நடந்த முன்னணி டைரக்டர்.. சூரியவம்சம் படத்தில் இப்படி ஒரு சம்பவமா?
'அடிச்சு கொன்னு போட்ருவேன்' 5 வயசு பையனிடம் இரக்கமில்லாமல் நடந்த முன்னணி டைரக்டர்.. சூரியவம்சம் படத்தில் இப்படி ஒரு சம்பவமா?

சூரியவம்சம் 2

மக்கள் மத்தியில் நாட்டாமை படத்திற்கு இருக்கும் மதிப்பை அறிந்த இயக்குநர் இந்தப் படத்தின் 2ம் பாகத்தை இயக்கலாமா என்ற முடிவில் இருக்கும் நிலையில், சூரியவம்சம் படப்பிடிப்பின் போது தனக்கு நடந்த மோசமான அனுபவத்தை பகிர்ந்தள்ளார் நடிகர் மாஸ்டர் மகேந்திரன்.

5 வயது குழந்தை நான்

மாஸ்டர் மகேந்திரன் பிளிமீபீட் சேனலுக்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து பேசி இருக்கிறார். சூரியவம்சம் படம் 1995, 1996 காலகட்டத்தில் படமாக்கப்பட்டது. நான் 1991ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிறந்தவன். எனக்கு சூரியவம்சம் படம் எடுக்கும் போது 5 வயசு. எனக்கு 5 வயதில் 'ஆங்கிள்ஸ்' அப்டிங்குற வார்த்தையே தெரியாது. 

நான் ஃபர்ஸ்ட் ஸ்கூலே போனது கிடையாது. 10வது வரைக்கும் வார்னிங் பிரபோஷன்ல தான் பாஸ் பண்ணினேன். ஹாரிபார்ட்டர் படம் பாத்து தான் நான் இங்கிலீஸே கத்துக்கிட்டேன். அதுனால எனக்கு 'ஆங்கிள்ஸ்'ன்னா என்னென்னே தெரியாது. அதுமட்டுமில்லாம ஒரு டைரக்டர்கிட்ட பேசுற நாலெட்ஞ்சும் எனக்கு இல்ல.

மாஸ்டர் மகேந்திரனின் ஆதங்கம்

விக்ரமன் சார் மாதிரி பிஸ்தா டைரக்டர்கிட்ட நான் போய் நின்னாலே போதும். அவங்களுக்குத் தெரியும் ஒரு குழந்தைய எப்படி வேலை வாங்கணும்னு. ஆனா, அவரு சொன்ன ஒரு வார்த்தை எனக்கு இன்னைக்கு வரைக்கும் ரொம்ப ஹேர்ட்டிங்கா இருக்கு. டைரக்டர் வந்து தயவு செஞ்சு அந்த குழந்தைய தூக்கிட்டு போயிடுங்க இல்லைன்னா அடிச்சே கொன்னுடுவேன்னு சொல்லிட்டாரு.

விக்ரமன் சார் பேமிலி எமோஷன்ஸ்க்கு பேர் போனவரு. அவரு எப்படி ஒரு பச்சக் குழந்தைய பாத்து அடிச்சே கொன்னுடுவேன்னு சொல்லலாம் என மாஸ்டர் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி செய்யலாமா?

இவர் இப்படி பேசியதற்கு காரணம், சரத் குமாரின் பேரன் கதாப்பாத்திரத்தில் நடிக்க இருந்தது மாஸ்டர் மகேந்திரன் தானாம். படப்பிடிப்பு தளத்திற்கு வந்த மகேந்திரன், டைரக்டர் விக்ரமனிடம் எந்த ஏங்கிளில் கேமரா வைத்து படம் எடுக்க போகிறீர்கள் என கேட்டதாகவும், ஒரு சிறுவன் தன்னை இப்படி கேட்கிறாரே என்ற கோவத்தில் அவரை திட்டி படத்திலிருந்து அனுப்பியதாகவும் மகேந்திரன் கூறியுள்ளார்.

மகேந்திரனுக்கு பதில் ஹிட் ஆன ஹேமா

இதையடுத்து தான் அந்த கதாப்பாத்திரத்தில் மகேந்திரனுக்குப் பதில், பெண் குழந்தை ஒன்றை ஆண் வேடமிட்டு நடிக்க வைத்திருப்பார் விக்ரமன். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள ஹேமா பேசிய 'பாயாசம் சாப்பிடுங்க பிரண்ட்', 'வேணும்னே யாராவது மை கொட்டுவாங்களா பிரண்ட்' போன்ற வசனங்கள் இந்த காலத்தில் மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளது.

இந்த வாய்ப்பைத் தான் தவறவிட்டுள்ளார் மாஸ்டர் மகேந்திரன். சூரியவம்சம் படத்தில் நடித்ததற்கு முன்னரே, இவர் நாட்டாமை படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் அவர் பேசிய வசனம் இன்றும் ட்ரோல் மெட்டீரியலாக பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மீண்டும் பீக்கில் வரும் மகேந்திரன்

இப்படி, சிறு வயது முதலே குழந்தை நட்சத்திரமாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான மாஸ்டர் மகேந்திரன் தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார். தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

என்னதான் இத்தனை படங்கள் நடித்திருந்தாலும், சிறு வயதில் தான் அறியாத ஒரு வார்த்தையை கூறியதாக தன் மீது குற்றம் சுமத்தியது இத்தனை ஆண்டுகள் கழித்தும் தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக் கூறியுள்ளார்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.