Mark Antony Teaser : மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் வெளியீடு எப்போது? படக்குழு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
மார்க் ஆண்டனி டீசர்
விஷால், எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா, AAA உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகா் விஷால் பிறந்தநாளான ஆக.29 ஆம் தேதி மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இந்த போஸ்டரில் தாடி, மீசையுடன் கையில் துப்பாக்கியை ஏந்திக்கொண்டு முற்றிலும் புதிய தோற்றத்தில் விஷால் காட்சியளித்தார்.
எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ரித்துவர்மா நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறாா். இந்நிலையில் மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டீசர் வரும் ஏப்ரல் 27ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்
தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.