Mark Antony Collection: வசூலில் தாறுமாறு: மார்க் ஆண்டனி பட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தெரியுமா?
மார்க் ஆண்டனி படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் விஷால், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரது நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது, படத்தில் இருக்கும் காமெடியால் படம் பிக்கப் ஆகத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, டைம் டிராவல் கான்செப்டில் சில்க் ஸ்மிதாவிடம் பேசுவதுபோல் உருவாக்கப்பட்ட காட்சிகளுக்குத் தியேட்டரில் விசில் பறக்கிறது.
படம் வெளியாகி ஐந்து நாட்களில் ரூ.62.11 கோடி வசூலை எட்டியுள்ளது. மேலும் பிளாக் பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளதால், படத்தை விஷால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது. நிறைய நாட்களுக்குப் பிறகு, விஷாலின் ஒரு படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், படத்தின் முதல் நாள் வசூல் 7.5 கோடியாக இருந்திருக்கிறது.
உலகளவில் நான்காவது மற்றும் ஐந்தாவது நாள் கலெக்ஷன் நிலவரம்:
தமிழ்நாடு - ரூ.7.61 கோடி மற்றும் 4.09 கோடி
கேரளா - ரூ. 60 லட்சம் மற்றும் 45 லட்சம்
கர்நாடகா - ரூ. 76 லட்சம் மற்றும் ரூ. 68 லட்சம்
ஆந்திரா மற்றும் தெலங்கானா - ரூ. 6.3 கோடி
5 நாள் வெளிநாடுகளின் வசூல் - ரூ.11.1 கோடி
உலகளவில் மொத்தம் - 5 நாட்களில், ரூ. 62.11கோடி.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்