Manoj bharathiraja: ‘7 வருஷம் சும்மா இருந்தேன்.. அப்பா பேரு எனக்கு நெகட்டிவ்தான்.. அவரே நம்பல’ - மனோஜ் பாரதிராஜா வேதனை!
மனோஜ்பாரதிராஜா தான் தோற்றக்கதையை மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இது குறித்து லிட்டல் டாக்ஸ் சேனலுக்கு அவர் பேசும் போது, “எஇந்த இடத்தில் நான் டைரக்டராக உட்கார்ந்து இருக்கிறேன். இதற்கு பலர் காரணமாக இருக்கலாம். ஆனால் மூலக்காரணம் அவள்தான். என்னை சுமந்து வந்த ஜீவன் அவள். உண்மையில் என்னுடைய கஷ்டம் அனைத்தையும் என்னுடைய மனைவி எடுத்துக்கொண்டாள். அவள் மற்றும் என்னுடைய குழந்தைகள் மட்டும் இல்லையென்றால், நான் என்றைக்கோ மன அழுத்ததிற்குள் சென்று இருப்பேன்.
வெளியே இருந்து பார்க்கும் யாருக்கும் பெரிய அளவில் தெரியாது.. அவனுக்கென்னடா பாரதிராஜா பையன்.. அவனுக்கு என்ன குறைச்சல்னு சொல்லுவாங்க. என்னோட இடத்துல இருந்து பார்த்தாதான் தெரியும்.
எப்பேர்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும், அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம் நிச்சயமாக இருக்கும். ஆகையால், நீ வந்து என்னுடைய இடத்தில் உட்கார்ந்து பார். இப்படிப்பட்ட காலத்தில் என்னுடன் இருந்த அந்த ஜீவனுக்கு நான் நன்றி சொல்லவில்லை என்றால் நான் மனுஷனே கிடையாது.
