Manjummel Boys box office: எங்கும் மலையாள மோகம்.. சம்பவம் செய்த சேட்டன்ஸ்..மஞ்சும்மல் பாய்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் இங்கே!
2ம் வார இறுதிநாளான நேற்றைய தினம் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 11.25 கோடி வசூல் செய்திருக்கிறது.
மலையாளத்தில் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொடுவல் இயக்கத்தில், கடந்த பிப்ரவரி 22ம் தேதி வெளியான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்தப்படத்திற்கு மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பல பிரபலங்களும் இந்தப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.
நண்பர் குழு ஒன்று கொடைக்கானலுக்கு செல்கிறது. அதில் ஒருவர் குணா குகையில் விழுந்து விடுகிறார். அவனை நண்பர்கள் குழு எப்படி மீட்டது என்பதே படத்தின் கதை. இந்தப்படத்தின் வசூல் தொடர்பான விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
இந்தப்படம் வெளியான அன்றைய தினம் 3.3 கோடி ரூபாய் வசூல் செய்தது. முதல் நாள் படம் பார்த்தவர்கள் படத்தைப் பற்றி பாசிட்டிவாக கருத்துக்களை பகிர, அதனைதொடர்ந்து படத்தை பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்குள் வர ஆரம்பித்தனர். இதனால் முதல் வார இறுதியில் இந்த திரைப்படம் 32கோடி ரூபாய் வசூல் செய்தது.
2ம் வார இறுதிநாளான நேற்றைய தினம் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் இந்தியாவில் மட்டும் 11.25 கோடி வசூல் செய்திருக்கிறது. நேற்றைய தினம் மாலை காட்சிகளில் 86 சதவீத மக்களும், மீதி காட்சிகளில் 75 சதவீத மக்களும் படத்தை பார்த்து ரசித்திருக்கின்றனர். இந்திய அளவில் இந்தத்திரைப்படம் இது வரை 57 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.
முதல் வாரம் - 32 கோடி
2 வார வெள்ளிக்கிழமை -4.75 கோடி
2 வார சனிக்கிழமை - 8.75 கோடி
2 வது சனிக்கிழமை - 11.25 கோடி
மொத்தம் - 56.75 கோடி
கேரளா - 34.50 கோடி
கர்நாடகா - 4.75 கோடி
தமிழ்நாடு - 16 கோடி
இதரபகுதிகள் - 1.50 கோடி
வெளிநாடுகளில் இந்தப்படம் 39 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. உலக அளவில் பார்க்கும் இந்தப்படம் 96 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இன்றைய தினம் இந்தத்திரைப்படம் 100 கோடி ரூபாயை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்