Manjima Mohan: மாயாஜால தருணம்… திருமணத்திற்கு பிறகு மஞ்சிமா போஸ்ட்!
நடிகை மஞ்சிமா தனது திருமணத்தை மாயாஜால தருணமாக மாற்றியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர்கள் மஞ்சிமா மோகன் - கௌதம் கார்த்திக் திருமணம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அதில் நெருங்கிய நண்பர்களும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் கணவருடன் அழக்காக இருக்கும் திருமண புகைப்படத்தை வெளியிட்ட மஞ்சிமா, “நம் வாழ்வின் மிகவும் மாயாஜால தருணம். ஒரு சிலரின் உதவி இல்லாமல் இது சாத்தியமில்லை.
எங்கள் திருமணத்திற்கு முதலில் வந்தவர் ஜாக்சன் மிகவும் ஆதரவாக இருப்பதற்கும், புரிந்து கொண்டு எங்களை குழுவிற்கு அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி.
இந்த திருமணத்தின் இரண்டு முக்கிய தூண்கள் ரோஷினி மற்றும் சுமன். எங்கள் திருமணத்தை மிகவும் அழகாக மாற்றியமைக்கு நன்றி நண்பர்களே. நீங்கள் தான் சிறந்தவர்கள். நாங்கள் கற்பனை செய்த விதத்தில் எங்களை அழகாக்குவதன் மூலம் நீங்கள் செய்த அனைத்து உதவிகளுக்கும் ரேஷ்மாவிற்கு நன்றி.
நன்றி வனிதா நீங்கள் எனக்கு செய்த கடைசி நிமிட உதவிக்காகவும் அதை அழகாகவும் செய்தீர்கள். இறுதியாக எங்களின் அன்பையும் ஆதரவையும் எங்களிடம் வழங்கும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், ஊடகங்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள்” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
டாபிக்ஸ்