TTF Vasan Case: ‘பெரியார் பிறந்த தினத்துல; அண்ணா மண்ணுல விழுந்துருக்கான்’- TTF வாசன் அரசியலுக்கு வருவது உறுதி- செல் அம்!
பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே விழுந்த ஒருவன் மாபெரும் தலைவனாக இந்த மண்ணிலே வருவான். வெல்வான்.” என்று பேசினார்.
மோட்டார் சைக்கிளில் சாகசங்கள் செய்து சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர் டி.டி.எஃப் வாசன். கடந்த செப்டம்பர் மாதம் காஞ்சிபுரத்தில் பைக் சாகசம் செய்த போது, எதிர்பாராத விதமாக இவரது மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானது.
இதனைத்தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில், அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்றைய தினம் அவர் ஜாமினில் வெளியே வந்தார். அவரை அழைத்து வர அவர் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கும் திரைப்படத்தின் இயக்குநர் செல்அம் உள்ளிட்ட பலர் சென்றனர்.
அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “
“தம்பியின் கை சரியான பிறகு படிப்பிடிப்பு ஆரம்பிக்கும். டி.டி.எஃப் வாசன் எந்த தேதியில் பைக்கில் இருந்து கீழே விழுந்தார் என்று தெரியுமா? அது செப்டம்பர் 17.. அது பெரியாருடைய பிறந்த நாள். தம்பி காஞ்சிபுரத்தில் விழுந்தார். பெரியார் பிறந்த தினத்திலே, அறிஞர் அண்ணா பிறந்த மண்ணிலே விழுந்த ஒருவன் மாபெரும் தலைவனாக இந்த மண்ணிலே வருவான். வெல்வான்.” என்று பேசினார்.
டி.டி.எஃப் வாசன் பேசும் போது, “ பைக்தான் என்னுடைய லைஃப்பே. என்னுடைய பேஷனைத்தான் என்னுடைய தொழிலாகவே மாற்றி இருக்கிறேன். அதற்காகவே என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கிறேன். அப்படி இருக்கும் போது இந்த விஷயத்தில் 10 வருடம் என்னுடைய ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருப்பது நியாயமே இல்லாதது போல் இருக்கிறது.
இது என்னை திருத்த வேண்டும் என்று செய்தது போல் இல்லை. என்னுடைய வாழ்க்கையை அழிக்க வேண்டும் என்று செய்தது போல இருக்கிறது. ஆனால் ஒன்றும் பிரச்சினை இல்லை. என்னைப்பற்றி கொடுத்த புகாரே தவறாக இருக்கிறது. எனக்கு விபத்து ஏற்பட்ட உடனே நான் என்னுடைய சுயநினைவை இழந்து விட்டேன். ஆனால் புகாரில் புதிது, புதிதுதாக எழுதி இருக்கிறார்கள். சிறுவர்கள் என்னைப்பார்த்து பைக்கில் சாகசம் செய்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்.. அவர்கள் கையில் ஏன் பைக்கை கொடுக்கிறீர்கள். இன்றைய தலைமுறையினர் மிகவும் புத்திசாலித்தனம் கொண்டவர்கள்.
ஜெயிலில் எனக்கு உணவு மற்றும் மருத்துவ உதவிகள் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் என்னுடைய கைகோனையாக ஆகி விட்டது. மறுபடியும் நான் சென்று ஆபரேஷன் செய்ய வேண்டும். பல ஊடகங்களில் எனக்கு கை உடையவே இல்லை என்ற தகவல்கள் வந்தன. ஆனால் கை உண்மையாகவே உடைந்து இருக்கிறது.
விபத்தில் கை போனதை விட ஓட்டுநர் உரிமம் போன போதுதான் மனம் வருந்தி, கண்கலங்கிட்டேன். தொடர்ந்து பைக் ஓட்டுவேன். சர்வதேச ஓட்டுநர் உரிமம் இருக்கிறது." என்று பேசினார்.
டாபிக்ஸ்