தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Manimegalai Salary In Cook With Comali 4

Manimegalai: குக் வித் கோமாளியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் என்ன?

Aarthi V HT Tamil
Mar 05, 2023 01:05 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

மணிமேகலை
மணிமேகலை

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த முறை குக் வித் கோமாளி சீசன் 4ல் கோமாளிகாக ஜி.பி. முத்து, ஓட்டேரி சிவா, மௌன ராகம் ஹீரோயின் ரவீனா, சில்மிஷம் சிவா, மோனிஷா, சிங்கப்பூர் தீபன் ஆகிய புதிய கோமாளிகளை அறிமுகம் செய்து வைத்து உள்ளனர் விஜய் தொலைக்காட்சி.

பழைய கோமாளிகளில் குரேஷி, புகழ், மணிமேகலை, கிசுனிதா ஆகிய நான்கு பேர் இருக்கின்றனர். இதில் கடந்த வாரம் மணிமேகலை கலந்து கொண்டார். இதற்கு அடுத்து வரும் எபிசோடுகளில் கலந்து கொள்ள மாட்டேம் என்று இது தான் குக் வித் கோமாளியில் தன்னுடைய கடைசி எபிசோட் என அறிவித்துவிட்டார்.

அதில், “இன்று என்னுடைய கடைசி எபிசோட். நான் வரமாட்டேன் என்பதை நானே வருவேன் கெட்டப் மூலமாக அறிவிக்கிறேன். கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் என் முதல் எபிசோடிலிருந்து என்னுடைய எல்லா பெர்ஃபாமன்ஸ்களுக்கும் நீங்கள் அன்பும் ஆதரவும் அளித்திருக்கிறீர்கள். அதற்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

எனக்கு கொடுத்த வாய்ப்புகளையும் சூழல்களையும் சிறப்பாக கொண்டு வர நான் கூடுதல் முயற்சிகளை எப்போதும் எடுப்பேன். இதுவரை குக் வித் கோமாளியில் எனக்கு கொடுத்த பணியை நான் சிறப்பாக செய்தேன் என நம்புகிறேன். உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்த அன்பு என்பது நான் எதிர்பார்க்காத ஒன்று. நான் எந்த காரியத்தை செய்தாலும் அதற்கு இது போன்றதொரு அன்பை அளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என குறிப்பிட்டு இருந்தார். 

இது போன்ற அறிவிப்பு வந்தவுடன் மணிமேகலை கர்ப்பமாக  இருக்கிறார்?, அவருக்கு பட வாய்ப்பு வந்துவிட்டன அதனால் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டர் என பல்வேறு பேச்சுகள் அடிப்பட்டன. இருப்பினும் உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளியில் கலந்து கொண்டதற்கு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்படி அவர் இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடுக்கு ரூ. 60 ஆயிரம் வாங்கியுள்ளார் என சொல்லப்படுகிறது. இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து தெரியவில்லை.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்