Yugendran Love Story: சிங்கப்பூர் பொண்ணு.. 5 நிமிட பார்வை தீ.. படாரென்று பற்றிக்கொண்ட காதல் - யுகேந்திரன் காதல் கதை!
பிக்பாஸ் சீசன் 7 -ன் போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்து இருக்கும், யுகேந்திரனின் காதல் கதை இங்கே!
பிரபல பாடகரான மலேசிய வாசுதேவனின் மகனான யுகேந்திரன் தற்போது பிக்பாஸ் சீசன் 7 -ல் போட்டியாளராக களமிறங்கி இருக்கிறார். இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஹேமா மாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவரும் அவரது மனைவியும் இந்தியா கிளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு தங்களுக்குள் காதல் பிறந்த கதையை பேசி இருந்தார்கள். அந்த காதல் கதையை பார்க்கலாம்.
யுகேந்திரன்: நான்தான் அவளிடம் முதலில் காதலை சொன்னேன். அவளிடம் நான் முதலில் கேட்டது நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்பதுதான். வெளியே செல்லலாமா, சினிமாவிற்கு செல்லலாமா, டீ குடிக்க போகலாமா என்றெல்லாம் கேட்கவில்லை.
ஹேமா: முதன் முதலாக இவர் என்னிடம் வந்து, நாம் கல்யாணம் செய்து கொள்ளலாமா என்றுதான் கேட்டார். அதுவே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பெற்றோர் சேர்த்து வைத்த திருமணத்தில் கூட, நாம் பேசுவதற்கு வாய்ப்பு இருக்கும். ஆனால், எங்களுக்கு அதற்கான வாய்ப்பு இல்லை.
நாங்கள் ஒரு 5 நிமிடம்தான் சந்தித்து இருப்போம். அப்போது இவரது நண்பர்கள் அனைவரும் உடன் இருந்தார்கள். அவர்கள், இவரை பற்றி, தண்ணி அடிக்க மாட்டார், சிகரெட் பிடிக்க மாட்டார். பெண்களை பார்க்க மாட்டார் என்றெல்லாம் பொய் சொன்னார்கள். நான் அதனை அப்படியே நம்பி விட்டேன். அதனைத்தொடர்ந்து என்னிடம் இவர் கல்யாணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். நான் உடனே ஓகே என்று சொல்லி விட்டேன். உண்மையில், நான் முதன்முறையாக இவரை சந்திக்கும் போது இவரை எனக்கு பிடிக்கவே இல்லை.
யுகேந்திரன்: இவர் சிங்கப்பூர் என்பதால் இவரது ஸ்டைலே கொஞ்சம் வேறு மாதிரியாக இருக்கும். ஆகையால், இவரிடம் பேச வேண்டும் என்றாலே கொஞ்சம் யோசித்துதான் பேச வேண்டும். காரணம், நாம் எதாவது சொன்னால் ஸ்டுபிட் என்று திட்டி விடுவார். இதைப்போன்று நான் நிறைய வாங்கி இருக்கிறேன். இறுதியில் நன்றி என்று சொல்லி கிளம்பிவிடுவேன்.
ஹேமா: எனக்கு இவரிடம் பிடித்தது யாரைப் பற்றியும் இவர் பெரிதாக புறம் பேச மாட்டார். பொறாமை பட மாட்டார். இவரிடம் ஒரு விதமான குழந்தைத்தன்மை இருக்கும். அதாவது இரண்டு, மூன்று வயது குழந்தையை பார்த்தால் கூட, அவர்களது லெவலுக்கு இறங்கி, அவர்களோடு பழகுவார். அது எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் இவருக்கு ஓகே சொன்னேன்
டாபிக்ஸ்