Malavika Mohanan: எருமைமாடு மீது சவாரி..உடல் முழுவதும் சொறி! தங்கலான் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்
திடீரென எருமைமாடு மீது ஏறி அமர சொன்னார் இயக்குநர் ரஞ்சித். இந்த காட்சி குறித்து முன்னரே சொல்லாததால் அதிர்ச்சி அடைந்தேன். 10 மணி நேரம் மேக்கப்புடன் வெயிலில் நடித்ததால் உடலில் சொறி ஏற்பட்டது என தங்கலான் பட அனுபவத்தை நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ளார்.

உடல் முழுவதும் சொறி, தங்கலான் அனுபவம் பகிர்ந்த மாளவிகா மோகனன்
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மேனன், பசுபதி உள்பட பலர் நடித்திருக்கும் தங்கலான் படம் விரைவில் திரைக்க வர இருக்கிறது. இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாக படம் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன் பின்னர் படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றும் வெளியாகி வரவேற்பை பெற்றது. படத்தில் நடிகை மாளவிகா மோகனன் மந்திரகாரியாக வருகிறார். விக்ரமுக்கும், இவருக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சி படத்தில் ஹைலைட்டாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து மாளவிகா மேனன் பல்வேறு விஷயங்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்தார்.
உடலில் சொறி ஏற்பட்டது
படத்தின் மிக நீண்ட கால அட்டவணை கோலாரில் நடைபெற்றது. இந்த படத்துக்காக அனைவரும் கடுமையான உழைப்பை வெளிப்படுத்தினோம்.