Malavika Mohanan: ‘விக்ரம் சார் மட்டும் இல்லன்னா’ - ‘தங்கலான்’ பற்றி நெகிழ்ந்த மாளவிகா மோகனன்!
நேற்றைய தினம் நடிகை மாளவிகா மோகனன் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் தங்கலான் படம் பற்றி கேட்டனர்.
நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்தப்படத்தில் நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மூலமாக இயக்குநர் பா.ரஞ்சித்துடன் முதன்முறையாக இணைகிறார் இசையமைப்பாளர் ஜிவிபிரகாஷ்குமார். அண்மையில் முடிந்த நடிகர் விக்ரமின் பிறந்த நாளன்று தங்லான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது.
இந்தப்படத்தின் ஷூட்டிங் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் நடந்த நிலையில், ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு கால் எழும்பு முறிந்தது. இதனால் அந்தப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் நேற்றைய தினம் நடிகை மாளவிகா மோகனன் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் தங்கலான் படம் பற்றி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த மாளவிகா, “ நான் இப்போது தங்கலான் படத்தை திரும்பி பார்க்கும் போது, இப்படியான கடினமான பயணத்தை விக்ரம் சார் இல்லாமல் என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இந்தத்திரைப்படம் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு ஷாட்டிலும் விக்ரம் சார் எனக்கு உதவியாக இருந்தார். விக்ரம் சுயநலம் இல்லாதவர். தன்னைச் சுற்றி உள்ளவர்களை அவர் நன்றாக பார்த்துக்கொள்வார். சகநடிகர்களை ஊக்கப்படுத்துவார். அவரிடம் இருக்கும் நகைச்சுவை வேற லெவலில் இருக்கும்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்