Mahesh Babu: தந்தையின் நினைவாக 40 மாணவர்களின் கல்விக்கான நிதியுதவி வழங்கிய மகேஷ் பாபு
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது மனைவி நம்ரதா ஷிரோத்கருடன் இணைந்து தொடங்கியிருக்கும் பவுண்டேஷன் மூலம் 40 மாணவர்களின் படிப்புக்கு தேவையான உதவித்தொகையை வழங்கியுள்ளார்.
டோலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவாக திகழ்ந்தவர் கிருஷ்ணா. தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் தந்தையான இவர் இறந்து முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபுவின் குடும்பத்தார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் பங்கேற்றனர்.
இதில் மகேஷ் பாபு, அவரது மனைவி நம்ரதா ஷிரோத்கர் ஆகியோர் மறைந்த நடிகர் கிருஷ்ணா, மகேஷ் பாபுவின் மனைவி இந்திரா தேவி ஆகியோரின் புகைப்படங்களுக்கு மரியாதை செலுத்தினர்.
கடந்த 2020இல் மகேஷ் பாபு மற்றும் நம்ரதா ஷிரோத்கர் இணைந்து புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்கினர். இந்த அறக்கட்டளை மூலம் படிப்புக்காக நிதியுதவி தேவைப்படும் குவந்தைகள், இதயம் தொடர்பான பிரச்னையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவிக்கான தொகை வழங்குதல் போன்றவற்றை வழங்கி வந்தனர்.
இந்த நட்சத்திர தம்பதியின் மகன் கெளதமுக்கு பிறக்கும் போதே இதய நோய் தொடர்பான பாதிப்பு இருந்த நிலையில், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காப்பாற்றப்பட்டது. இந்த நிகழ்வுதான் மகேஷ் பாபு, நம்ரதா தம்பதிகளை இப்படியொரு அறக்கட்டளையை தொடங்கி செயல்படுத்த காரணமாக அமைந்தது.
இதையடுத்து இவர்களின் இந்த அறக்கட்டளைக்கு மறைந்த தனது தந்தையின் பெயரை சேர்த்து சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா கல்வி நிதியம் என பெயர் வைத்துள்ளார் மகேஷ் பாபு. தற்போது இந்த நிதியம் மூலம் தந்தையின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியையொட்டி 40 மாணவர்களுக்கு பள்ளி முதல் பட்ட மேற்படிப்புக்கு தேவையான நிதியுதவி வழங்குகிறார்.
1960 முதல் 2000ஆவது ஆண்டு வரை தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராகவும், முன்னணி நடிகராகவும் திகழ்ந்து வந்த கிருஷ்ணா தனது 80வது வயதில், மாரடைப்பால் நவம்பர் 15, 2022இல் உயிரிழந்தார்.
மகேஷ் பாபு தற்போது த்ரிவிக்ரம் சீனிவாஸ் இயக்கத்தில் குண்டூர் காரம், ராஜமெளலி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்