Ravinder Chandrasekar: ஜெயிலில் இருந்து வந்த கணவர்.. எமோஷனல் போஸ்ட் போட்ட மகாலாட்சுமி
நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த கணவர் பற்றி மகாலாட்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
லிப்ரா புரொடக்ஷன் நிறுவனத்தின் உரிமையாளர் ரவீந்தர் சந்திரசேகர். யூடியூப் பேட்டிகளில் வலம் வந்து பிரபலமான இவர், சின்னத்திரை நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்ததின் மூலம் மேலும் பிரபலமானார். இவர் மீது சென்னையைச் சேர்ந்த பாலாஜி என்பவர் புகார் அளித்திருந்தார்.
அதில், தன்னை திடக் கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பார்க்கலாம் எனக் கூறி, ரூ 15 கோடி வரை மோசடி செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கடந்த 7ஆம் தேதி ரவீந்தர் சந்திரசேகரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ரவீந்தர் சந்திரசேகர் ஜாமின் கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இரண்டு முறை மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஐந்து கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை ரவீந்தர் செலுத்த வேண்டும் என கூறி நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த கணவர் பற்றி மகாலாட்சி பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், “நீ என் முகத்தில் புன்னகையை வரவழைப்பதில் தவறில்லை
யார் மீதும் காதல் வருவதற்கு ஒரே காரணம் நம்பிக்கை தான். ஆனால் இங்கே என்னை விட நம்பிக்கை உன்னை நேசிக்கிறது!!
அதே அன்பைப் பொழிந்து முன்பு போல் என்னைக் காப்பாயாக.. லவ் யூ” எனக் குறிப்பிட்டு உள்ளார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்