Actor Ilavarasu: வசமாக சிக்கிய நடிகர் இளவரசு.. எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் - நடந்தது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Ilavarasu: வசமாக சிக்கிய நடிகர் இளவரசு.. எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் - நடந்தது என்ன?

Actor Ilavarasu: வசமாக சிக்கிய நடிகர் இளவரசு.. எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம் - நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil
Jan 29, 2024 04:00 PM IST

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக சென்னை, தி.நகர் காவல்நிலையத்தில் நிதி முறைகேடு புகார் அளிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் இளவரசு.
சென்னை உயர் நீதிமன்றம், நடிகர் இளவரசு.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் 4 மாதத்துக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், அந்த உத்தரவின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்குள் போலீசார் விசாரணை முடிக்கவில்லை என்று ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும், நடிகருமான இளவரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு கடந்த டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் டிசம்பர் 13-ம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யபட்டுவிட்டதாகவும் டிசம்பர் 12 ஆம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான சிசிடிவி கேமரா காட்சிளும் சமர்பிக்கப்பட்டன. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர், டிசம்பர் 13 ஆம் தேதிதான் அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் எனவும் டிசம்பர் 12ஆம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தாகவும், காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள சிசிடிவி காட்சிகள் அனைத்தும் போலியானவை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் ஜனவரி 29-ம் தேதி தாக்கல் செய்யுமாறு காவல்துறைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த வழக்கு இன்று (ஜன.29) மீண்டும் விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில், மொபைல் லோகேஷன் விவரங்கள் மற்றும் சிடிஆர் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இளவரசு தரப்பில், 12 ஆம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. காவல் துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி, இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம் எனவும் தெரிவித்தார்.

மேலும், 12ஆம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதை கூறி, மன்னிப்பு கோரினால், அதை ஏற்க தயாராக இருப்பதாக தெரிவித்த நீதிபதி, இல்லாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்து, காவல்துறை தாக்கல் செய்த விவரங்கள் தொடர்பாக நடிகர் இளவரசு விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை நாளை தள்ளி வைத்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.