Maaveeran Collection: ரூ.50 கோடி வசூலை நெருங்கும் மாவீரன்
மாவீரன் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் ஃபாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல சாதனைகளை முறியடித்து வருகிறது.
இப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 50 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவீரன் வசூலால், எஸ்கே ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். படம் விரைவில் 100 கோடி கிளப்பில் சேரும் என எதிர்பார்க்கின்றனர். அப்படி நடந்தால் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் மூன்றாவது படமாக இந்த படமாக இருக்கும்.
மாவீரனின் நாள் வாரியான பாக்ஸ் ஆபிஸ் வசூல்
நாள் 1: ரூ 8.1 கோடி
நாள் 2: ரூ 9.3 கோடி
நாள் 3: ரூ 10.25 கோடி
நாள் 4: ரூ 4.5 கோடி
நாள் 5: ரூ 4.2 கோடி
மொத்த 5 நாள் வசூல்: ரூ. 36.35 கோடி
2023 ஆம் ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த முதல் 5 படங்களில் இந்தப் படம் நுழைந்து இருக்கிறது. நான்காவது இடத்தில் மாவீரன் உள்ளது.
தனுஷின் வாத்தி 5 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. அஜித்தின் துணிவு இன்னும் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் 2, இரண்டாம் இடத்தையும், விஜய்யின் வரிசு 3 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.
மாவீரன் ஏற்கனவே தயாரிப்பாளருக்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்துள்ளது. மேலும் இது சிவகார்த்திகேயனின் இயக்கத்தில் உருவாகி வரும் அயலான் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் அயலான். மாவீரனின் வெற்றி நிச்சயம் அயலான் படத்திற்கு உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெற்றியை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்