மீண்டும் தள்ளிப் போன மாமனிதன் ரிலீஸ் தேதி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  மீண்டும் தள்ளிப் போன மாமனிதன் ரிலீஸ் தேதி

மீண்டும் தள்ளிப் போன மாமனிதன் ரிலீஸ் தேதி

Aarthi V HT Tamil
Jun 13, 2022 04:45 PM IST

விஜய் சேதுபதி நடித்து இருக்கும் மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது.

<p>மாமனிதன்</p>
<p>மாமனிதன்</p>

தென் மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்குப் பின்னர் இவர்கள் கூட்டணியில் 'இடம் பொருள் ஏவல்' , 'தர்மதுரை' ஆகிய படங்கள் வெளியானது. இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது . அதனால் விஜய் சேதுபதி - சீனு ராமசாமி படங்களின் மீது ரசிகர்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவானது.

இதனையடுத்து தற்போது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் , 'மாமனிதன்' . இந்த படத்தில் காயத்ரி , அனிகா உள்ளிட்டோர் முன்னணி நட்சத்திரங்களாக நடித்து இருக்கின்றனர்.

இந்த படத்தை யுவன் ஷங்கர் ராஜா தயாரித்து உள்ளார் . வழக்கமாக ஒரு படத்திற்கு ஒரு இசையமைப்பாளர் மட்டுமே இருப்பார்கள் ஆனால், ' மாமனிதன் ' படத்தில் மட்டும் இளையராஜா , யுவன் ஷங்கர் ராஜா , கார்த்திக் ராஜா என மூவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.

ஏற்கனவே ' மாமனிதன் ' படத்தின் டீஸர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

2019ஆம் ஆண்டே படத்தின் முழு பணிகள் முடிந்தாலும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது.

இப்படம் மே 20ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் பல காரணங்களால் படம் ஜூன் 23ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் மாமனிதன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு உள்ளது. அதன் படி மாமனிதன் படம் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.