விஜய் இயக்கத்தில் நடிக்கும் ஜீவா! பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! நடிகர் அர்ஜுனும் கூட்டணியா?
நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் அகத்தியா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தினை பாடலாசிரியர் பா. விஜய் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஜீவாவுடன் நடிகர் அர்ஜூன், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கும் ஒரு சில ஹீரோக்களில் ஜீவாவும் ஒருவர். இவரது மாறுபட்ட காதபாத்திரங்களால் ரசிகர் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். காமெடி கதைக் களமாக இருந்தாலும், சீரியஸ் கதைக் களமாக இருந்தாலும் அனைத்திலும் புகுந்து விளையாடக் கூடிய ஒரு நடிகர் தான் ஜீவா. இவர் தயாரிப்பாளார் ஆர். பி. சவுத்ரியின் மகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அவருக்கென தனிப்பெயரை பெற்றுள்ளார்.
தடுமாறும் படங்கள்
ஆசை ஆசையாய் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜீவா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்து எடுத்த படங்கள் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இருந்தன. அமீர் இயக்கத்தில் ராம், இயக்குநர் ராம் இயக்கத்தில் கற்றது தமிழ் என கதாப்பத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்தார். சிவா மனசுல சக்தி வாயிலாக சந்தானம் உடன் காமெடியிலும் கலக்கி இருப்பார். மேலும் கோ போன்ற ஆக்சன் படங்களையும் விட்டு வைக்க வில்லை. இவ்வாறு அனைத்து ஜானார்களிலும் கலக்கிய ஜீவாவிற்கு கடந்த சில ஆண்டுகளாக சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படம் வெற்றியை பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் தற்போது பிளாக், அகத்தியா, கண்ணப்பன் என வரிசையாக பட அப்டேட்களை கொடுத்து வருகிறார்.
ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனின் வாழ்க்கையை மையமாக வைத்து கடந்த பிப்ரவரியில் தெலுங்கில் யாத்ரா 2 வெளியானது. இந்நிலையில் இனி அடுத்து வரும் படங்களில் ஜீவா தான் விட்ட இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.