Simbu Love : சிம்புவுடன் காதலா? நடிகை சித்தி இத்னானி சொல்வது என்ன?
நடிகை சித்தி இத்னானி ஊடகம் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் சிம்புவுடன் காதலா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

சிம்புவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சித்தி இத்னானி. படத்தில் பாவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். அடுத்து அவர் ஆர்யாவுக்கு ஜோடியாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படமும் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் சித்தி இத்னானி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் சிம்புவும் நீங்களும் காதலிக்கிறீர்கள் என தகவல் பரவுகிறது என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அவர், “ கிசுகிசு பத்தியெல்லாம் நாம் ரொம்ப யோசிக்க கூடாது. சினிமாவுக் குள்ளே வந்துட்டாலே வித்தியாசமா பேசத்தான் செய்வார்கள்.
நிறைய விஷயம் நம்ம பத்தி நல்லதா வரும். சில விஷயங்கள் திடீர்னு தப்பா வந்துடும். அதுல உண்மை இல்லாட்டியும் அத நம்ப ஆரம்பிச்சுடுவாங்க. என்ன இந்த கிசு கிசுவெல்லாம் படிக்க நல்லா இருக்கும். அவ்வளவுதான். இதை யெல்லாம் ரொம்ப மைண்ட்ல ஏத்திடக் கூடாது. நம்ம வேலையை பாத்து போய்க்கிட்டே இருக்கணும்” என பதில் அளித்துள்ளார்.
