தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mtv Splitsvilla X5: குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்..! Mtv Splitsvilla X5இல் அடுத்த ஸ்பெஷல்

MTV Splitsvilla X5: குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்..! MTV Splitsvilla X5இல் அடுத்த ஸ்பெஷல்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 10, 2024 08:41 AM IST

இந்தியாவின் டேட்டிங் நிகழ்ச்சியாக சன்னி லியோன் தொகுத்து வழங்கும் MTV Splitsvilla சீசன் 15இல், குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. காதல் குகையில் தனியாக ஒரு ரவுண்ட் பெட் மற்றும் ஜக்குஸி, சாக்லெட் ஃபவுண்டெயின் என காதலர்கள் தனியாக தங்கள் காதலை வலுப்படுத்தும் வசதிகள் உள்ளன

குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்
குணா குகை போல காதல் குகையை அறிமுகப்படுத்திய சன்னி லியோன்

ட்ரெண்டிங் செய்திகள்

எம்டிவி ஸ்பிலிட்ஸ்வில்லா சீசன் 15

அழகான பெண்கள் மற்றும் சிக்ஸ்பேக் ஆண்கள் என மொத்தமாக 21 பேருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் 3 பேர் அதிரடியாக எலிமினேட் செய்யப்பட்டனர். அரிக்கா, நிதி மற்றும் ராகுல் உள்ளிட்ட மூன்று பேர் MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட்டுள்ளனர். முதல் முறையாக நடைபெற்ற எலிமினேஷனில் 3 பேர் அதிரடியாக வெளியேற்றப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக காதல் குகை என்கிற கான்செப்ட்டை சிறந்த காதல் ஜோடிக்காக இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சன்னி லியோன் இந்த குகை அறிமுகத்தின் மூலம் போட்டியாளர்கள் சன்னி லியோன் குஷிப்படுத்தியுள்ளார்.

காதல் குகை

Love Den என அழைக்கப்படும் காதல் குகையில்தனியாக ஒரு ரவுண்ட் பெட் மற்றும் ஜக்குஸி, சாக்லெட் ஃபவுண்டெயின் என காதலர்கள் தனியாக தங்கள் காதலை மேலும், வலுப்படுத்திக் கொள்ளும் விதமாக ஏகப்பட்ட பிரைவேட்டான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

யார் அந்த லக்கி ஜோடி

இந்த சீசனில் காதல் குகை என அழைக்கப்படும் பிரைவேட்டான இடத்துக்கு சென்று தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் லக்கி ஜோடியாக அக்ரிதி மற்றும் ஜஸ்வந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த இருவருக்கும் இடையே தான் சமீபத்தில் காதல் தீ பற்றிக் கொண்டது. அந்த இருவரும் தான் இந்த சீசனில் முதல் முறையாக காதல் குகைக்குள் சென்று செம ரொமான்ஸ் செய்யவுள்ளனர்.

டென்ஷனும் இருக்கு

அக்ரிதி மற்றும் ஜஸ்வந்த் காதலுக்கு ஆப்படிக்கும் விதமாக சச்சினின் பொறாமை குணமும் சேர்ந்து இந்த காதல் ஜோடியை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்கிற சூழ்ச்சி வலையும் தீட்டப்பட உள்ள நிலையில், ரசிகர்களுக்கு தேவையான டென்ஷனும் அதிகமாகவே இந்த நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளது.

ஸ்பிளிட்ஸ்வில்லாவில் இருக்கும் போட்டியாளர்கள் "ஸாரா ஸாரா" சவாலுக்கு ரெடியாகி உள்ள நிலையில், நிகழ்ச்சி தீப்பற்றிக் கொண்டது. ஜோடிகளுக்கு இடையிலான குற்றச்சாட்டுகள், பஞ்சாயத்து என நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியிருக்கிறது.

டெட்லாக்

நிகழ்ச்சியில் ஐந்து ஜோடிகள் டெட்லாக்கில் சிக்கிய நிலையில், ஜோடிகள் மாறுவதற்கான வாய்ப்புகள், காதல், மோதல் பஞ்சாயத்து என MTV Splitsvilla X5:ExSqueeze Me Please நிகழ்ச்சி ரசிகர்களுக்கு வேறலெவல் என்டர்டெயின்மென்ட்டை கொடுத்து வருகிறது.

எம்டிவி மற்றும் ஜியோ சினிமாவில் இந்த நிகழ்ச்சியை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு கண்டு ரசிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்