தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Mtv Splitsvilla X5 Contestant: சன்னி லியோன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவின் ஹாட் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

MTV Splitsvilla X5 Contestant: சன்னி லியோன் தொகுத்து வழங்கும் டேட்டிங் ஷோவின் ஹாட் போட்டியாளர்கள் லிஸ்ட் இதோ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 02, 2024 06:45 PM IST

MTV Splitsvilla X5 VContestant:இளைஞர்களை கவரும் டேட்டிங் நிகழ்ச்சியாக சன்னி லியோன் தொகுத்து வழங்கும் எம்டிவி ஸ்பிளிட்ஸ் வில்லா இருந்து வருகிறது. இதில் பங்கேற்கும் ஹாட்டான 10 போட்டியாளர்கள் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்.

ஸ்பிளிட்ஸ் வில்லா நிகழ்ச்சியில் சன்னி லியோன்
ஸ்பிளிட்ஸ் வில்லா நிகழ்ச்சியில் சன்னி லியோன்

ட்ரெண்டிங் செய்திகள்

ரசிகர்களின் கனவுக்கன்னியாக இருந்து வரும் சன்னி லியோன், பெண்கள் நெஞ்சை கொள்ளை கொண்ட வெள்ளை மாதவன் போல இருக்கும் தனுஜ் விர்வானி இணைந்து இந்த போட்டியை நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் 21 இளம் போட்டியாளர்கள் தங்கள் காதலை கண்டுபிடிக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி இளமை துள்ளலுடன் கலக்கலாக நடைபெற்று வருகிறது.

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் MTVயிலும், JioCinemaவிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்பட்டு வருவதால் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை விரும்பி பார்க்கத் தொடங்கி உள்ளனர்.

இந்தியாவின் பரபரப்புக்கு பஞ்சமில்லாத டேட்டிங் ரியாலிட்டி டிவி நிகழ்ச்சியின் 15வது சீசன் ஆரம்பித்து அமர்க்களமாக சென்று கொண்டிருக்கிறது. MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள 21 முரட்டு சிங்கிள்கள் மிங்கிளாக போட்டிப் போடும் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட 10 பேர் யாரெல்லாம் என்பதை பார்க்கலாம்

அக்ரிதி நேகி

MTV Splitsvilla X5: ExSqueeze Me Please நிகழ்ச்சியில் போட்டியாளராக 22 வயதே ஆன துணிச்சலான மற்றும் கவர்ச்சியான போட்டியாளர் அக்ரிதி நேகி (Akriti Negi) பங்கேற்றுள்ளார்.

இன்ஃப்ளூயன்ஸர் மற்றும் கன்டென்ட் கிரியேட்டரான அக்ரிதி நேகி ஏற்கனவே MTV Roadies Karm ya Kand நிகழ்ச்சியில் பங்கேற்று ஏகப்பட்ட ரசிகர்களை ஈர்த்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் இவரை கரெக்ட் பண்ண ஆண் போட்டியாளர்கள் துடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ருஷாலி யாதவ்

நல்ல ஹைட்டு சார்.. நல்ல ஒயிட்டு சார்.. என்பது போல பார்த்தவுடனே இளைஞர்களை ஈர்க்க கூடியவர் தான் ருஷாலி யாதவ் (Rushali Yadav). India's Next Top Model Season 4 ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு டாப் 3 போட்டியாளராக வந்து அசத்தியவர் ருஷாலி யாதவ். தனியாக காலணி பிசினஸ் ஒன்றையும் நடத்தி வருகிறார் இந்த கில்லாடி போட்டியாளர்.

காஷிஷ் கபூர்

23 வயது இளம் மாடல் மற்றும் கன்டென்ட் கிரியேட்டரான காஷிஷ் கபூர் (Kashish Kapoor) இந்த போட்டியில் ஏகப்பட்ட இளைஞர்கள் இதயங்களை கவர்ந்து வருகிறார். ஆனால், இவருடைய இதயத்தை கவர்வது அவ்வளவு லேசுபட்ட காரியம் அல்ல. இவருக்கான ஜோடியாக இருக்க மேடம் ஏகப்பட்ட கண்டிஷன்களை லிஸ்ட் போட்டு வைத்திருக்கிறார்.

இஷிதா ராவத்

சண்டிகரை சேர்ந்த மார்க்கெட்டிங் மேனேஜர் மற்றும் மாடல் அழகியான இஷிதா ராவத் (Ishita Rawat) சன்னி லியோன் தொகுத்து வழங்கும் இந்த டேட்டிங் ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். ஜென்டில்மேனாகவும், உண்மையான நபராகவும் இருந்தால் இவரை கவர்ந்து விடலாம் எனக் கூறியுள்ளார்.

ஷோபிகா பலி

21 வயது இளம் பஞ்சாபை சேர்ந்த மாடல் அழகி ஷோபிகா பலி (Shobhika Bali) சன்னி லியோனின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வருகிறார். லண்டனில் இருந்து திரும்பி வந்த என்ஆர்ஐ ஆன இவர் டேட்டிங் கேமில் மாஸ் காட்டி வருகிறார்.

டாக்டர் அரிக்கா

26 வயது மருத்துவம் படித்த திறமையான போட்டியாளராக டாக்டர் அரிகா (Dr. Arica) களமிறங்கி உள்ளார். அறிவும் அழகும் ஒரே இடத்தில் சேர்ந்த பெண்ணாக இருக்கும் இவர் சிறந்த பாடகியும் பெல்லி நடனம் ஆடும் திறமை கொண்டவராகவும் உள்ளார்.

கனாக் வக்னானி

துபாயில் நடிகையாகவும் மாடலாகவும் இருந்த 20 வயது என்ஆர்ஐ கனாக் வக்னானி (Khanak Waghnani) இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். திறமையான நடனக் கலைஞரான இவருக்கு கெட்ட வார்த்தையில் பேசினால் பிடிக்காது. அதே நேரம் இவருடன் சண்டை போட யாராவது வந்து விட்டால் வெளுத்து வாங்கி விடுவாராம்.

நிதி கோயல்

ஸ்ப்ளிட்ஸ் வில்லா சீசன் 5ல் போட்டியாளராக நிதி கோயல் (Nidhi Goyal) பங்கேற்றுள்ளார். 24 வயதான ஃபேஷன் டிசைனரான இவருக்கு யோகா கலையெல்லாம் அத்துப்படி. மேலும், டிராவல் பிளாகராகவும் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார்.

அனிகா ஷர்மா

24 வயதான ஃபேஷன் இன்ஃப்ளூயன்ஸர் அனிகா ஷர்மா (Anicka Sharma) இந்த ஆட்டத்தில் வேற லெவல் வித்தைகளை இறக்கி இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

தேவாங்கினி வியாஸ் 

உதைப்பூரில் இருந்து வந்திருக்கும் 24 வயதான மாடல் அழகியான தேவாங்கினி வியாஸுக்கு நல்ல அழகான கட்டுடல் கொண்ட இளைஞரை பார்ட்னராக ஆக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தேவையில்லாத வெட்டி பந்தா சீனை எல்லாம் போட மாட்டேன் என்றே கூறியுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்