Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜின் ரோல் மாடல் இந்த நடிகராம்!
வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்து படம் பண்ணுவேன் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
நடிகர் கமல்ஹாசன் தான் என்னுடைய ரோல் மாடல் என கோவை தனியார் கல்லூரியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இயக்குனர் லோகஷ் கனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் மாணவர்களிடம் பேசினார். மேலும் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். அனைவரையும் பார்ப்பதில் மகிழ்ச்சி எனவும் சரவணம்பட்டியில் தான் தனியார் நிறுவனத்தில் நான் முதலில் பணிக்கு சேர்ந்தேன், இது எனக்கு நெருக்கமான இடம். கல்லூரியில் முதல் மூன்று ஆண்டு மிக முக்கியம், எல்லாரும் நல்லா மார்க் எடுக்க வேண்டும் என தேவையில்லை, உங்க ஹார்ட் சொல்லுவதை கேளுங்கள்.
கோவையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோவையில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு மாற்றம் இன்னும் வரவில்லை என தெரிவித்த அவர்,
சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால், சென்னை தான் போக வேண்டும் நிலை மாற வேண்டும். லியோ திரைப்படம் அக்டோபர் 19 ரிலிஸ் ஆக உள்ளது. அது உங்களுக்கே தெரியும். லியோவிற்கு அடுத்து பெரிய அப்டேட் இருக்கிறது எனவும்
கல்லூரி காலம் காதல் பெரிதாக ஒன்றுமில்லை எனவும் தெரிவித்தார். வாய்ப்பு கிடைத்தால் அஜித்தை வைத்து படம் பண்ணுவேன்.
லியோ LCU தான் என்பதை சொல்ல இன்னும் 3 மாதம் காலம் உள்ளது. உங்களுடன் படம் எடுக்கனும் என மைக் பிடித்து கேள்வி கேட்ட மாணவனை, மேடை ஏற்றி புகைப்படம் எடுத்து கொண்டார். தளபதி சூப்பராக இருக்கிறார்,
எல்லாருடனும் படம் எடுக்க வேண்டும் என தெரிவித்த அவர், என்னுடைய ரோல் மாடல் கமல்ஹாசன் தான் எனவும், கைதி 2 , அடுத்த படம் முடித்த பிறகு எடுக்க இருக்கின்றேன் எனவும், என்னிடம் ஏற்கனவே 14 உதவி இயக்குனர்கள் உள்ளார்கள் எனவும் தெரிவித்தார். என்ன நமக்கு தோன்றுகின்றதோ அதை பண்ண வேண்டும் எனவும், தொழில் மேல் உள்ள பயம் தான், ஒரு இடத்திற்கு கொண்டு போய் நிறுத்துகிறது எனவும், அதற்கு பயப்பட வேண்டாம் எனவும் தெரிவித்தார். கணக்கு காடத்தில் நான் ரொம்ப கேவலமான மார்க் எடுத்தேன் எனவும், கிராப் போன்ற பிரிவுகளால்தான் கணிதத்தில் பாஸ் பண்ணினேன் எனவும் தெரிவித்தார்.
இன்று கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு என்ன வேண்டும் என்பது 20 வயதிலே உங்களுக்கு தெரிகிறது எனவும், ஒவ்வொரு ஹீரோவையும் வைத்து படம் பண்ணனும் தான் நினைக்கிறேன் என தெரிவித்த அவர், இரும்பு கை மாயாவி 10 வருடமாக எழுதிய கதை எனவும், இது தான் என்னுடைய ட்ரீம் ப்ராஜெக்ட். எப்போது கல்யாணம் என்ற கேள்விக்கு நோ பர்சனல் கேள்விகள் என்று பதில் அளித்தார். எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டும் எனவும், இங்க அவமானம் படறோம் என்பதல்லாம் இல்லை. ஒரு படம் எடுக்கனும் முடிவு செய்து அதற்கான ஆட்களை வைத்து படம் பண்ணிவிட்டால், நீங்கள் இயக்குனர் தான் எனவும் தெரிவித்தார்.
தளபதி பற்றி சொல்ல நிறைய இருக்கு, எத்தனையே நடிகர்களுடன் பணிபுரிந்து இருக்கிறேன், ஆனால் அண்ணன் என்று கூப்பிட நினைக்க வைத்தவர் விஜய் மட்டும் தான் என தெரிவித்த அவர், லியோ செகண்ட் சிங்கிள் லேட் ஆகும். எனக்கும் லவ் ஸ்டோரிக்கும் செட் ஆகதுன்னு நீங்க எப்படி முடிவு பண்ணலாம் எனவும் தெரிவித்தார். லியோ படத்தில் திரிசா மேடத்திற்கு ஒன்னும் ஆகாது எனவும் மாணவர்களுடனான கலந்துரையாடலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார்.‘
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்